தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குழுமம் என்ற இந்த இணையம் வெளிநாடு மற்றும் உள்ளூர் தலைமை, மண்டலம், மாவட்ட மற்றும் அனைத்து கிளைகளையும் இணைக்கும் சிரிய முயற்சி |..அக்டோபர் 8 இட ஒதுக்கீடு போராட்டம்.. தாயாராகி விட்டீர்களா?....| ....|
Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

Thursday, October 13, 2011

உங்கள் ஊர் கிளைகளுக்கும் வந்ததா?

அன்புள்ள கொள்கை சகோதரர்களுக்கு..
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

நம்முடைய ஜமாஅத்தின் பிரச்சாரத்தையும், செயல்பாடுகளையும் ஒடுக்குவதையே குறிக்கோளாக கொண்ட தமுமுக, பல ஊர்களில் ஊர் ஜமாஅத்தார்களை தங்கள் கைக்குள் வைத்துக்கொண்டு நம்முடைய ஜமாஅத் சகோதரர்களை சில ஊர்களில் அடித்து சித்ரவதைகள் செய்ததையும், பல இடங்களில் பிரச்சாரத்தை தடுப்பதற்காக முக்கிய மூலதாரிகளாக செயல்பட்டவர்கள் தற்போது உள்ளாட்சி தேர்தலில் ”எங்களுக்கு ஓட்டு போடுங்க” நாங்கள் தான் முஸ்லிம்களின் காவலர்கள் என்று நம்முடைய ஜமாஅத்திற்கு கடிதங்கள் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

அல்ஹம்துரில்லாஹ்... அன்று நம்மை பார்த்து ஏசியவர்கள் இன்று நம்முடைய ஆதரவு இன்றி எந்த வார்டுகளிலும் வெற்றியடைய முடியாது என்ற நிலைக்கு அல்லாஹ் அவர்களின் உள்ளத்தை மாற்றி விட்டான்.

அன்று நம்முடைய பள்ளிகளை கைப்பற்றுவதற்காக இவர்கள் திமுக ஆட்சியில் வக்கு போர்டை கைபாவையாக பயன்படுத்தி திருடப்பார்த்தவர்கள். தனியாக நம்முடைய ஜமாஅத்திற்காக பள்ளி கட்ட ஆரம்பித்தால் அதை எவ்வாறு எல்லாம் தடுக்கலாம் என்று நினைத்தவர்கள் இன்று அதே பள்ளிக்காக நாங்கள் இருக்கிறோம் என்று அவர்களே கூறும் அளவிற்று மாறியதாக செய்திகள்.

சில ஊர்களில் ஆதரவு கேட்டு நம்முடைய ஜமாஅத்திற்கு கடிதங்களும் வந்துவிட்டது. மேலும் விளக்கம் தேவை என்றாலும் நம்முடைய ஜமாஅத் அழைத்தால் வாக்குறுதியும் அளிப்பார்களாம்.

எங்க கொண்டுபோய் எழுதா? இவங்க வாக்குறுதியை?

இது போன்று கடிதங்கள் உங்கள் கிளைகளுக்கும் வந்துள்ளதா?

முத்துப்பேட்டையில் ரஹ்மத் பள்ளியை கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் முத்துப்பேட்டை ஜமாஅத்தார்களுக்கும் நம்முடைய ஜமாஅத்திற்கும் மத்தியல் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதை எல்லாம் மறந்து நபி (ஸல்) அவர்கள் என்றதும் பல ஜமாஅத்துக்கள் ஆதரவு மட்டுமின்றி, வருகை தந்ததும் குறிப்பிடதக்கது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமுமுக வின் மாநில செயற்குழு உறுப்பினர் ஒருவரும் வந்து கலந்து கொண்டார். முத்துப்பேட்டையை சுற்றியுள்ள ஊர்களிலிருந்து மாமாகட்சியினரும் வந்துள்ளனர். இவர்கள் நன்மையை நாடி (நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி விட்டார்கள் என்பதற்காக ) வந்திருந்தால் அதற்கான கூலியை மறுமையில் அல்லாஹ் வழங்குவான்.

இதற்கு முன்னும் நாம் டென்மார்க் போன்ற செய்தி நிறுவனங்களை கண்டித்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் வந்து கலந்து கொள்ளாதவர்கள் தான் இவர்கள். இப்போது மட்டும் என்ன ? மாற்றம் என்ற கேள்வியை நாம் இறைவனிடம் விடுவது தான் சிறந்தது.

ஓட்டுகாக நம்மை அவர்கள் நாடவேண்டிய நிலைக்கு அல்லாஹ் அவர்களை ஆக்கிவிட்டான்... என்று நினைக்கும் போது... அல்ஹம்துரில்லாஹ்..

இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். 'உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்' என்று அவன் கூறினான். 'எனது வழித் தோன்றல்களிலும்' (தலைவர்களை ஆக்குவாயாக!) என்று அவர் கேட்டார். 'என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது' என்று அவன் கூறினான். அல்குர்ஆன் 2-124

நம், நம்முடைய முதல் இமாம் இப்ராஹீம் நபி அவர்களின் கொள்கைகளை உறுதியாக பின் பற்ற படுபவர்களாக, என்றைக்கும் யாருக்காகவும் எதற்காகவும் மார்க்கத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று நிர்பதினால் தான் அல்லாஹ் நமக்கும் நம்முடைய ஜமாஅத்திற்கும் இவ்வளவு பெரிய கன்னியத்தை அல்லாஹ் வழங்கியிருக்கிறான்.

நாம் அன்று வளைந்திருந்தால் ”யார் எல்லாம் நம்மை எதிர்த்தார்களே” அவர்கள் இன்று நம்மையே நாடவேண்டிய நிலைக்கு அல்லாஹ் மாற்றியிருப்பானா? என்பது கேள்வி குறி தான்.

'எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்' (என்றனர்.) அல்குர்ஆன் 2:128

நாம் இந்த கொள்கை உறுதியல் நிலைத்திருக்கக் கூடியவர்களாக ஆக்க அல்லாஹ்விடம் அதிகம் அதிகம் துஆசெய்வோம்.

தன்னை அறிவிலியாக்கிக் கொண்டவனைத் தவிர வேறு யார் இப்ராஹீமின் மார்க்கத்தைப் புறக்கணிக்க முடியும்? அவரை இவ்வுலகில் நாம் தேர்வு செய்தோம். அவர் மறுமையில் நல்லோரில் இருப்பார். 2:130

Tuesday, October 11, 2011

முற்றுகைப் போராட்டம் தேவையற்றதா...?


அன்பான முகநூல் அன்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மாத்துல்லாஹி வ பரக்காத்துஹு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் இன்று (10-10-2011) முத்துப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தேவையற்றது,பப்ளிசிட்டிக்காக நடத்தப்பட்டது போன்று முகநூல் வாயிலாகவும்,ஈமெயில் வாயிலாகவும் சில விஷமிகள் தவறாக பிரச்சாரம் செய்து வருவது நம் கவனத்திற்கு வந்தது! இது சம்பந்தமாக திருவாரூர் மாவட்ட தலைவர் (திருத்துறைப்பூண்டி) சகோ அப்துர் ரஹ்மான் கூறும் தகவல் இதோ::::

ரஹ்மத் ஸ்கூலுக்கு (முத்துப்பேட்டை) எதிராக இன்று நாம் நடத்திய முற்றுகைப் போராட்டம் குறித்து குழப்பத்தை உண்டு பண்ண நினைக்கும் சில விஷமிகள் "திரித்தும் "மட்டரகமாக விமர்சித்தும் வருவது நம் கவனத்திற்கு வந்தது! இந்த "முற்றுகைப் போராட்டம் ஏன்" என்பது சம்பந்தமாக ஏற்கனவே விளக்கம் கொடுக்கப்பட்டாலும் சில விஷமிகள் திரித்துக் கூறும் சில தகவல்களுக்கு உண்டான விளக்கம் இதோ...!

கேள்வி:::? இந்த போராட்டம் வேண்டுமென்றே "பப்ளிஷிட்டிக்காக" நடத்தப்பட்டதா...?

பதில்!!! பப்ளிஷிட்டிக்காகவும்,வேண்டுமென்றே இந்த ஆர்ப்பாட்டத்தை நாம் நடத்த நாடினால்... சுமார் 55 நாட்கள் கடந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நாம் நடத்தியிருக்க மாட்டோம்! என்றைக்கு இந்தப் பிரச்சனை கிளம்பியதோ அன்றே நடத்தியிருப்போம்! இன்னும் சொல்வதென்றால் பிரச்சனை கிளம்பிய அன்றே நாம் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தாலும் யாரும் எந்தக் கேள்வியும் எழுப்பியிருக்க முடியாது! ஏனெனில் பிரச்சனை வாய்க்கால் வரப்பு,சம்பந்தப்பட்ட பிரச்சனையோ,கொடுக்கல் வாங்கல் பிரச்சனையோ இல்லை ! நம் ஒவ்வொருவரின் ஈமானுடன் பிண்ணிப் பிணைந்த பிரச்சனை! நாம் உயினும் மேலாக மதிக்கும் "இறைத்தூதரை" இழிவுபடுத்திய பிரச்சனையை ஒரு சாதாரண பிரச்சனையாக நாம் எடுத்துக் கொள்ள முடியுமா..? இருப்பினும் நாம் முதலில் பேச்சுவார்த்தையில் இறங்கினோம் !அந்த ஸ்கூலின் முதன்மை ஆசிரியர் சகுந்தலா அவர்களிடம் கேட்கும் போது "தவறு நடந்து விட்டது " என்று சொன்னார்! நாம் விநியோகிக்கப்பட்ட "ஆண்டு விழா மலர் புத்தகங்களை உடனே மீட்டெடுங்கள் என்று பலமுறை அவகாசம் கொடுத்தோம், போனின் மூலமாக,லட்டரின் மூலமாக இப்படி பல்வேறு வழிகளிலும் நாம் கோரிக்கை வைத்தும் அவை நிராகரிக்கப்பட்டது! அவசரம் காட்டவேண்டிய இந்த பிரச்சனையில் பல்வேறு சொதப்பலான காரனங்களைக்கூறி தள்ளிப் போடுவதிலேயே ரஹ்மத் ஸ்கூல் நிர்வாகம் குறியாக இருந்தது . ரஹ்மத் ஸ்கூல் நிர்வாகம் இந்த பிரச்சனையை அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை! என்று சொல்வதை விட ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை! இறைத்துதரை அவமானப் படுத்தியதை அவர்கள் பெரிதாக எண்ணிக் கொள்ளவில்லை! மாறாக தங்களது ஸ்கூல் மானம்(?) (பெயர்)கெட்டுவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்தனர்.(இதுபோல் நபிகளாரை அவமதித்து கார்ட்டூன்கள் வெளியிட்ட மற்றவர்களிடத்தில்(டென்மார்க்,முத்தாரம்,நக்கீரன் ) உடனடியாக செய்தி கேள்வி பட்டவுடன் நாம் ஆர்ப்பாட்டம் நடத்தி நம் கடுமையை உடனே வெளிப்படுத்தினோம் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி உடனடியாக மன்னிப்புக் கேட்க வைத்தோம்)ஆனால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தாமலேயே இந்த விஷயத்தை சுமூகமாக முடித்து விடலாம் என்று எடுத்த முயற்சிகள் அனைத்தையும் ரஹ்மத் நிர்வாகம் துச்சமாக மதித்தது!

கேள்வி::?? ரஹ்மத் நிர்வாகம் மன்னிப்புக் கேட்டும் அதை ஏற்றுக்கொள்ளாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியது ஏன்..?

பதில்..! இந்தக் கேள்விக்கு ஏற்கனவே பதில் கொடுக்கப்பட்டுவிட்டது! அதாவது. தங்களின் இந்த செயலுக்காக ஸ்கூல் நிர்வாகத்திடம் நாம் எதிர்பார்த்தது மன்னிப்பை மட்டும் அல்ல! அவர்கள் இறைத்தூதரின் உருவத்தை ஒரு பேப்பரில் வரைந்து அதை மக்களிடத்தில் காட்டி இதுதான் இறைத்தூதர் (நவூதுபில்லாஹ்)என்று காட்டிவிட்டு,பின்பு தாங்கள் செய்தது தவறு என்று உணர்த்தப்பட்டவுடன் உடனே அதே பொதுமக்கள் முன்னிலையில் அந்த பேப்பரைக் கிழித்து போட்டு விட்டு தவறுக்கு வருந்துகிறோம்! என்று சொன்னால் ஒரு வாதத்திற்கு அந்த மன்னிப்பை ஏற்றுக் கொள்ளலாம்!

ஆனால் அவர்கள் இறைத்தூதரை அவமதித்து வெளியிட்டது பல பிரதிகள் எடுக்கப்பட்டு,உள்நாடுகளிலும்,வெளிநாடுகளிலும்,ஸ்கூல் மானவிகளிடத்திலும் பரவலாக விநியோகித்து விட்டது! மேலும் அவர்கள் மன்னிப்புக் கேட்டது தெரியாமல் செய்துவிட்டோம் என்று உணர்ந்து அந்த மன்னிப்பை வெளிப்படுத்தியதாக தெரியவில்லை! ஏனெனில் நம் ஆர்ப்பாட்டம் நடத்தும் நிமிடங்கள் வரை விநியோகிக்கப்பட்ட புத்தகங்களை வாபஸ் வாங்குவதற்கு எந்த ஒரு சிறு முயற்சியும் அவர்கள் எடுக்கவில்லை! அவர்கள் உண்மையில் தங்களின் தவறை உணர்ந்திருந்தார்கள் என்றால்...ஒரு பேச்சுக்கு வெளிநாடுகளில் விநியோகிக்கப்பட்ட புத்தகங்களை திரும்பப் பெறுவதற்கு கால தாமதம் ஆனால் கூட முத்துப்பேட்டையில் விநியோகிக்கப்பட்ட புத்தகங்கள் வாபஸ் பெறுவதற்கு 55 நாட்கள் தேவைப்பைட்டிருக்குமா..? நாம் அவர்களிடம் முறையிட்ட இரண்டொரு நாளில் திரும்பப் பெற்றிருக்க முடியும்!(இந்த நிமிடங்கள் வரை புத்தகங்கள் வாபஸ் பெறப்பட்ட வில்லையே!) அப்படியென்றால்..அவர்கள் வேண்டுமென்றே தான் இந்த தவறை செய்திருக்கிறார்கள்.. என்பதை நாம் விளங்கிக் கொண்டவுடன் இனியும் இவர்களிடத்தில் “பேச்சுவார்த்தை” எந்தப் பயனும் தராது என்று முடிவு செய்து இவர்களின் சதி வேலையை மக்கள் மன்றத்தில் தெரிவிக்க ஆர்ப்பாட்டத்தில் இறங்கினோம்!

கேள்வி::? சம்பந்தப்பட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் போராட்டத்தில்தான் TNTJ குறியாக இருந்ததா...?

பதில்..! நாம் ஏற்கனவே முன்னமே இதற்குண்டான பதிலை சொல்லிவிட்டோம். போராட்டம் நடத்துவதில்தான் நாம் குறியாக இருந்திருந்தால் இத்தனை நாட்கள் (55) நாம் கடத்தியிருக்க மாட்டோம்!செய்தி கேள்வி பட்ட அன்றோ,அல்லது ஒரு சில நாட்களிலோ நாம் ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்போம்! ஆனால் போராட்டம் நடத்தாமலே இந்த விஷயத்திற்கு தீர்வு காண நாம் எடுத்த முயற்சிகள் அனைத்தையும் ரஹ்மத் ஸ்கூல் நிர்வாகம் ஒரு பொருட்டாக கருதவில்லை! பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஒவ்வொருவரும் கால தாமதத்திற்குத்தான் குறியாக இருந்தார்கள்! நிர்வாகத்திலிருந்து ஒருவர் சொல்வார் இரண்டு நாட்கள் அவகாசத்தில் புத்தகங்களை வாபஸ் வாங்கி விடுவோம் என்பார்,மற்றொருவர் ஐந்து நாட்கள் என்பார்,இன்னுமொருவர் பதினைந்து நாட்கள் என்று அவர்களுக்குள்ளேயே ஒத்தக் கருத்துக்கு வராமலும்,தங்களுக்குள் ஆலோசனை செய்யாமலும் நம்மை ஆஃப் பன்னுவதிலேயே குறியாக இருந்தார்கள்!அவர்கள் பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்சனையை சுமூகமாக முடித்து விடலாம் என்பதில் அவர்களுக்கு சிறிதும் அக்கறை இல்லை என்பதை மேற்கண்ட ஒவ்வொருவரின் வார்த்தைகளும் நமக்கு உணர்த்துகிறது! ஆகவே! இந்த ஆர்ப்பாட்டம் நடத்தும் அளவுக்கு நம்மை தள்ளியது, ரஹ்மத் ஸ்கூல் நிர்வாகம்தான் என்பதை மீண்டும் ஒரு முறை தெளிவு படுத்துகிறோம்!

உண்மை என்னவென்று விளங்கிக்கொள்ளாமல் மனம்போன போக்கில் விஷக்கருத்துக்களை பரப்பி மகிழ்வோர் அல்லாஹ்வையும்,மறுமையும் அஞ்சிக் கொள்ளட்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்!

(குறிப்பு::: நாம் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் எதிரொலியாக ரஹ்மத் ஸ்கூல் நிர்வாகத்தை அரசும் உடனடியாக புத்தகங்களை வாபஸ் பெறுங்கள் என்று நிர்வாகத்திற்கு கட்டளை பிரப்பித்துள்ளது! அதன் பலனாக நிர்வாகம் தங்கள் ஸ்கூல் மாணவிகளிடத்தில் உடனடியாக புத்தகங்களை திரும்பக் கொண்டுவரும்படி கட்டளையிட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் வந்துள்ளது!)

அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே! அல்லாஹு அக்பர்!

By: Abdul Hameed Mahlari, 
பொதக்குடி, திருவாரூர் மாவட்டம்.



Thursday, October 6, 2011

ரஹ்மத் ஸ்கூல் இயங்கும் தடம் எது? பணமா? சேவையா?


திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் அப்துல் காசிம் நகரில் (பட்டுக்கோட்டை ரோட்டில்) அமைந்துள்ளது இப்பள்ளி. இது ரஹ்மத் ட்ரஸ்ட் (சென்னை ரஹ்மத் அறக்கட்டளை) சார்பாக பெண்களுக்காக 1994-ல் அடிக்கல் நாட்டப்பட்டு  1996 ல் துவங்கியது. இந்த அடிக்கல் நாட்டு விழா வில் வைரமுத்து, பாரதிராஜா போன்று சினிமாதுறையே முதன்மை வகித்தது என்று கூறுகையில், பள்ளிக்கும்- சினிமாவிற்கும் என்ன சம்மந்தம்? இப்பள்ளி துவக்கத்திலேயே பாதி வேலை முடிந்தும் முடியாததுமாக திறக்கப்பட்டது. துவங்கிய முதல் ஆண்டுலேயே கட்டிடத்திற்காக தரத்தில் ஆரம்பித்தது முதல் பிரச்சனை இப்பள்ளிக்கு…
தமிழக மக்களுக்கு நபி மொழி தொகுப்பான புகாரி-யை முதலில் தமிழாக்கம் செய்தது இந்த ட்ரஸ்ட் தான். தற்போது சென்னையை தலைமையாக கொண்டு இயங்கும் .இந்த ட்ரஸ்ட் முதல்வர் முஸ்தபா, இவர் முத்துப்பேட்டையை சார்ந்தவர். இந்த ட்ரஸ்டிகளாக இவர்களின் குடும்ப நிர்வாகமே இருக்கிறது. ஆனால் இதன் ஆலோசகர்களை பார்ந்தால் தான் வேடிக்கை Mr. MALAISAMI I.A.S (RAJYA SABHA)
KAVIPPERRARASU "VAIRAMUTHU" KAVIKO "ABDUL RAHMAN"
Mr. KALYANASUNDARA THEVAR (CHAIRMAN) PANCHAYAT UNION - MUTHUPET
Mrs. KAAMILAH, D/O. M.A. MUSTHAFA.
அது போகட்டும். இப்பள்ளியின் முதன்மை ஆசிரியராக ஒரு முஸ்லிம் பெண்கள் கூட இருந்தது இல்லை. முஸ்லிம் ஆசிரியர்களும் குறைவு தான்.

அடுத்து இவர்கள் ஆரம்பித்து சரியாக இரண்டு ஆண்டுகள் இருக்கும் 1997-1999 வரை உள்ள இடைப்பட்ட ஆண்டில் இவர்களது வாகனம் முத்துப்பேட்டை –திருத்துறைபூண்டி சாலை 10Km ல் கோபாலசமுத்திரம் என்ற இடத்தில் வைக்கோல் மீது வேன் வேகமாக சென்றதில் ஆற்றுக்குள் கவிழ்ந்தது. ஒட்டுமொத்த குழந்தைகளும் தண்ணீருக்குள். யாருக்கும் பெரிய அளவு சேதம் இல்லை என்றாலும், அப்போது சில பெண் குழந்தைகளுக்கு காதில் சேற்று நீர் ஏறியது. இதை மருத்துவர்களும் சரியாக கவணிக்காததால், இச்சம்பவம் நடந்து சில ஆண்டுகளுக்கு பின் அக்குழந்தைகள் காதில் அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு சென்றது.
படிக்கும் வயதில் எது கூடாதே அந்த நாகரிகத்தை தேடிய பெண்கள் இவர்களின் பள்ளியில் வெளியில் அழைத்து ஓடும் நிலை உறுவாகவே. அப்போது தான் பள்ளி தனது கட்டுப்பாட்டை அதிகரித்தது. அதுமட்டுமல்லாது பொதுவாக பள்ளியில் சிறு சிறு சம்பவங்கள் அடிக்கடி நடப்பது உண்டு. இதில் இப்பள்ளி மட்டும் என்ன விதிவிளக்கா? என்ன.

பொதுவாக ஆண்டு விழா நிகழ்ச்சிகள் என்றால் போதும் ஆட்டம், பாட்டம், என பள்ளிகள் வாரி கட்டிக்கொண்டு நிற்கும். இதில் இப்பெண்கள் பள்ளியும் சிக்கியது. ஆரம்பித்த காலம் முதல் இப்போது வரையும் இங்கு ஆடல், பாடல் காட்சிகள். ஆரம்பத்தில் ஒரு வயது வந்த பெண் நடனம் ஆடியதற்காக முத்துப்பேட்டை ஜமாஅத் நிர்வாகங்கள் பள்ளியையும், ஆட்டம் போட்ட பெண்னையும் கட்டித்தது. அதன் பின் வயது வந்த முஸ்லிம் பெண்கள் ஆடுவதை நிறுத்தியது. ஆனாலும் பருவ வயது அடைய கூடிய பெண்களை ஆடிவிடுவதை நிறுத்தவில்லை.

இஸ்லாமிய மார்க்த்தின் இரண்டு தூன்களான திருக்குர்ஆன் மற்றும் நபி மொழிகள் என்பதை நாம் அறிந்தவர்கள். அது தமிழில் கிடைத்ததால் சாமானிய மக்களும் இஸ்லாத்தை பள்ளி அறிய முடிந்தது என்பதை மறுப்பதற்கு இல்லை. அப்படி பட்ட தூன்களில் ஒன்றான நபி மொழி தொகுப்பை முதல் முதலில் தமிழில் வெளியிட்ட சென்னை ரஹ்மத் அரக்கட்டளை என்பதையும் நாம் அறிந்தவர்கள். http://www.rahmath.net/Index.aspx அப்படி பட்ட இந்த நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது மேற்க்கண்ட ரஹ்மத் பெண்கள் பள்ளியும். இவர்கள் மார்க்கம் மக்களுக்கு போகவேண்டும் என்பதற்காக மொழயாக்கம் செய்தார்களா? அல்லது மக்களிடம் பணம் பார்க்கலாம் என்பதற்காக செய்தார்களா? நன்மையை நாடியவர்களாக இருந்தால் இவர்கள் இப்பள்ளியிலும் இம்மார்க்க விசயங்களிலும் சரியாக இருந்திருக்க வேண்டும்.

. (முஹம்மதே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். 'உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்' என்று கூறுவீராக! 17-85

மார்க்கத்தை கூறுவதை (மார்க்க கல்வியை) விட உலக கல்விக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் இவர்களை என்னவென்பது. இவர்கள் மட்டும் அல்ல இதன் சுற்று வட்டாரத்தில் சில முஸ்லிம்கள் மார்க்க அடிப்படையில் கொண்டு செல்லப்போகிறோம் என்று பள்ளி கூடங்களை உருவாக்கி பணத்தை பார்த்ததும், அதன் மோகத்தின் காரணமாக மார்க்கத்தை பின்னுக்கு தள்ளி உலக ஆசைக்கு ஆட்படுவிட்டனர். ஆண்டு விழா என்ற பெயரில் பல பள்ளிகள் ஆண்களையும், பெண்களையும் பள்ளி கூடங்களில் காட்சி பொருளாக காட்டிவருகின்றனர். குழந்தைகளுக்கு கல்வியை புகட்ட வேண்டிய பள்ளிகள் இது போன்று நடப்பது ஆனாகரிகமானது.

பின்னர் நீங்கள் உங்களை (சேர்ந்தவர்களை)க் கொலை செய்தீர்கள். உங்களில் ஒரு பகுதியினரை அவர்களது வீடுகளிலிருந்து விரட்டினீர்கள். அவர்களுக்கு எதிராக பாவமான காரியத்திலும், வரம்பு மீறலிலும் உதவிக் கொண்டீர்கள்! உங்களிடம் (யாரேனும்) கைதிகளாக வந்தால் (உங்கள் வேதத்தில் உள்ளபடி) ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்கிறீர்கள். (அதே வேதத்தில் உரிமையாளர்களை அவர்களின் வீட்டிலிருந்து) வெளியேற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. வேதத்தில் ஒரு பகுதியை ஏற்று, மறு பகுதியை மறுக்கிறீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் இழிவைத் தவிர வேறு கூலி இல்லை. கியாமத் நாளில் கடுமையான வேதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை. அல்குர்ஆன் 2:85

 அதே போன்று இவர்கள் இல்லத் திருமணங்களை இப்பள்ளியில் வைத்து நடத்துவதுடன் இரண்டு மூன்று நாட்களுக்கு இலவச சாப்பாடு என்றும், சினிமாதுறையினரை அழைத்து கூத்தடிப்பதும் இவர்களின் வளக்கமான செயலாக உள்ளது. பள்ளியின் ஆண்டு விழா போன்ற நிகழ்ச்சிகளும் கூட இது போன்று சினிமா விபச்சாரர்களை அழைத்தும் கல்விக்கு உரிய கன்னியத்தை மட்டப்படுத்துவது இவர்களின் வாடிக்கையான நிகழ்வு.
முத்துப்பேட்டையில் மிகபெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலவதாக இருப்பது இவர்கள் தான் எனலாம். அந்த அளவிற்கு பணம் இருந்தும் மார்க்கம் இல்லையே என்ற போது வேதனை தான். சில (2) ஆண்டுகளுக்கு முன் தான் இங்கு பெண்கள் தொழுகைக்காக பள்ளிவாசல் கட்டப்பட்டது. இங்கு தற்போது பெண்கள் பாதுகாப்பு மற்றும் தொழுகைக்கு மட்டும் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை தவிற மற்றவைகள் வேதனை தான்.

9மணிக்கு பள்ளி ஆரம்பம் என்றால் காலை 6.30, சில இடங்களில் 7மணிக்கு எல்லாம் வாகனம் வந்து கொண்டு சென்று மாலை 6.30 அல்லது 7 மணி வரை (Special Class) சிறப்பு வகுப்பு முடித்து வீட்டிற்கு வரும் பெண் குழந்தைகள் சாப்பிடுமா? அல்லது வீட்டு பாடம் எழுதுமா? அல்லது நாளை வகுப்பு தேர்வு இருக்குமே அதற்கு படிக்குமா? அல்லது தங்கள் பெற்றோர்களிடம் சற்று உரையாடுமா? அல்லது குர்ஆன் ஓதுவது போன்ற காரியங்களில் ஈடுபடுமா? என்பது எல்லாம் கேள்வி குறி(?) பின்னர் 8மணிக்கு உறக்கம். காலை மீண்டும் தொடரும் இதே புரானம். சரி சனிகிழமை தான் ஓய்வு எடுக்கலாம் என்றால் அன்றைக்கும் வகுப்புகளை வைத்து குழந்தைகளை மூளையை கசக்குவது என்று அடிக்கிக் கொண்டே போகலாம். ஞாயிற்றுகிழமை மட்டும் தான் விடுமுறை என்றாலும் அதிலும் வீட்டுப்பாடம், மறுநாள் (Class test) தேர்வு என விலுந்து விலுந்து படிக்கும் குழந்தைகள். பெற்றோர்கள் குழந்தையை வா.. வெளியூர் போகலாம் என்றால் முடியாது என்கின்றது குழந்தைகள். பின்ன படிக்கலட யாரு அடி வாங்குரது..     

இவர்கள் பள்ளி சற்றும் பிரபலம் ஆகவே, அவர்களின் சேர்க்கை போன்றவற்றை மாற்றி அமைத்தனர். அது என்ன?வென்றால், வேறுபள்ளியில் பயின்ற குழந்தைகளுக்கு (Entrance Exam )நூழைவு தேர்வு என்று வைத்து நன்கு படிக்கும் குழந்தைகளை மட்டும் சேர்ப்பார்களாம். குழந்தைகள் வேறுபள்ளியில் சரியாக படிக்கவில்லை என்பதற்காக தான் இவர்களிடம் (Rahumthu School) கொண்டுவந்து சேர்க்கிறார்கள். நன்றாக குழந்தை படிப்பதாக இருந்தால் ஏன் பெற்றோர்கள் இங்கு வருகிறார்கள்? என்ற அறிவு கூட இல்லாதவர்களாக உள்ளனர். படிப்பு சரியாக வராத குழந்தைகளுக்கு தான் சிறந்த பள்ளி கூடம் தேவை. நன்றாக படிக்கும் குழந்தைகள் எங்கு படித்தாலும் நன்றாக படிக்கும். சிறுபான்மையினர் கோட்டாவில் பள்ளியை துவங்கிய இவர்கள் உன்மையில் அறிவுடையவர்கள் தான் என்றால் படிக்காத குழந்தைகளை கொடுவாருங்கள் நாங்கள் படிப்பை சரியாக கற்றுக்கொடுக்கிறோம் என்று கூறுவார்களா? இது இப்பள்ளிக்கு மட்டும் அல்ல. பல பள்ளிகள் இது போன்ற முட்டால் தனமாக செய்கின்றனர். சில பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் முதலில் படித்திருக்கவேண்டும் என்பார்கள். தாங்கள் தான் படிக்கவில்லை தங்கள் குழந்தையாவது படிக்கட்டும் என்றால் இப்படி ஒரு கட்டளைகள். இது அதையும் விட கொடுமை.

படிக்காத குழந்தைகளை ஒதுக்கிவிட்டு படிக்கும் குழந்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டு 10ம் வகுப்பு 12ம் வகுப்பு தேர்வுகளில் 100% என்று பீத்திக்கொள்வது (http://adiraipost.blogspot.com/2009/05/2-100.html) இது போன்ற தனியார் பள்ளி நிர்வாகத்தின் குணம் என்பதை தாங்கள் அறிவீர்களா? இவர்கள் உன்மையில் கல்வியை சேவையாக செய்தால், படிக்காத குழந்தைகளை அனுப்புங்கள் நாங்கள் சரியாக கற்றுத்தருகிறோம் என்று கூறட்டும். பார்ப்போம்.


அதுமட்டுமா? இப்பள்ளியில் பணபரிப்பு கொடுமையே கொடுமை. அனைத்தையும் எழுதுவதாக இருந்தால் கை தான் உடையும். சகோதரர்களே. வெளிநாடுகளில் தங்கள் குடும்பத்திற்காகவும், தங்களில் குழந்தைகளுக்காகவும் இரவு பகலாக வேலை பார்க்கும் நம் சகோதரர்கள் அனுப்பும் பணத்தை சர்வசாதாரனமாக கல்வியின் பெயரில் சுரன்டும் இவர்களை என்னவென்பது. தங்கள் குழந்தையின் ஆங்கில அறிவுக்காக தங்களை ஆட்படுத்திக் கொண்ட எத்தனை சகோதரர்கள் வெளிநாடுகளில் கஷ்டப்படுகிறார்கள் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அதே போன்று முத்துப்பேட்டையில் உள்ள பெண்கள் அரசு பள்ளியில் (State Borad ) மாநில பாடத்திட்டத்திலேயே ஆங்கிலம் தனி + தமிழ் வழி என இரண்டு முறையும் உள்ளது. இதில் எதில் வேண்டும் என்றாலும் சேரலாம். பணம் பணம் என்று அழையும் தனியார் பள்ளிகள் நிர்வாகத்திற்கு வேட்டுவைக்கலாம். தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டனத்தை வசூல் செய்தாலும், சீருடை, வாகனம் போன்றவற்றில் தங்களது கணக்கை சரிசெய்து கொள்கின்றன.
அதுமட்டுமின்றி பெண்கள் படிப்பை பொறுத்தவரை தாங்கள் அவர்களுக்கு குறிப்பிட்ட அளவு வரை கல்வியை கொடுத்து நிறுத்துவது நல்லது. மேற்கொண்டு கல்வியை கற்க சென்று சில பெண்கள் வழி தவறியதையும் நாம் அறிவோம். தங்கள் குடும்பம் என்று வரும் போது தங்கள் குழந்தை கல்வியை கற்றுக்கொடுக்கும் அளவிற்கு கற்றிருந்தால் போதுமானது.

2.42 அறிந்து கொண்டே சரியானதைத் தவறானதுடன் கலக்காதீர்கள்! உண்மையை மறைக்காதீர்கள்!



2.145 வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அத்தனை சான்றுகளையும் (முஹம்மதே!) நீர் கொண்டு வந்தாலும் அவர்கள் உமது கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள். நீர் அவர்களின் கிப்லாவைப் பின்பற்றுப வராக இல்லை. அவர்களிலேயே ஒருவர் மற்றவரின் கிப்லாவைப் பின்பற்றுபவராக இல்லை. உமக்கு விளக்கம் வந்த பின் அவர்களின் மனோ இச்சையை நீர் பின்பற்றினால் நீர் அநீதி இழைத்தவராவீர்!

இவர்கள் தான் தற்போது 2011ம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் ஆண்டு மலரில் முஸ்லீம்கள் தங்களது உயிருக்கு மேலாக மதிக்கும் நபி (ஸல் ) அவர்களை கற்பனையாக உருவம் வரைந்து புத்தகம் வெளியிட்டு நபி (ஸல் ) அவர்களை அவமனபடுத்தியது. இது குறித்து முத்துப்பேட்டை கிளை, இப்புதகங்களை திரும்பப்பெற வேண்டும் என வலியுத்தியும் பள்ளி நிர்வாகம் அலட்சியம் செய்யவே. இப்பிரச்சனை TNTJ மாவட்ட நிர்வாகத்திற்கு செல்லவே, பள்ளி நிர்வாகத்தையும் தாளாளர் உள்ளிட்ட அனைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும் புத்தகங்களை உடனே திரும்பபெற கோரியும் ரஹ்மத் மெட்ரிகுலேசன் ஸ்கூல் முன்பு மாபெரும் முற்றுக்கை போராட்டத்தை அறிவித்தது TNTJ மாவட்டம் நிர்வாகம்.



 இன்ஷா அல்லாஹ் 10.10.2011 காலை 10.00மணிக்கு, கண்டன உரை மேலான்மை குழு உறுப்பினர் பக்கீர் முகம்மது அல்தஃபி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.  நபி (ஸல் ) அவர்களை அவமானப்படுத்திய கயவர்களின் முகத்திரை கிழித்தெறிய அனைவரும் குடும்பத்துடன் வருக..
இவன்
TNTJ,


குறிப்பு – சென்னை ரஹ்மத் ட்ரஸ்ட் ஆரம்ப காலத்தில் சகோ. பி.ஜே அவர்கள் தான் மொழியாக்கம் செய்தார் என்று எமக்கு நினைவில் (1994 முதல் பதிப்பில்) உள்ளது. அதே போன்று திர்மிதி 1 பாகம் பி.ஜே அவர்கள் தான் மொழிபெயர்த்தார். பின்னர் இது தவ்ஹீத் கிதாப் என்று மக்கள் கூறிவிடுவார்கள் என்பதற்காக அடுத்த அடுத்த புகாரி போன்ற மொழயாக்கங்கள் வேறு நபருக்கு மாற்றிவிட்டார்கள். என்று நான் அறிந்துள்ளேன்.  

 புகைப்படங்கள் நன்றி:  ரஹ்மத் முகநூல் Click
இனியேனும் இவர்கள் மார்க்க விசயத்தில் அலட்சியமாக இருப்பார்களேயானால் இது அவர்களுக்கு தான் கேடு.

7.165. கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த போது தீமையைத் தடுத்தவர்களை (மட்டும்) காப்பாற்றினோம். அநீதி இழைத்தவர்களை அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் கடுமையாகத் தண்டித்தோம்.