அன்பான முகநூல் அன்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மாத்துல்லாஹி வ பரக்காத்துஹு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் இன்று (10-10-2011) முத்துப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தேவையற்றது,பப்ளிசிட்டிக்காக நடத்தப்பட்டது போன்று முகநூல் வாயிலாகவும்,ஈமெயில் வாயிலாகவும் சில விஷமிகள் தவறாக பிரச்சாரம் செய்து வருவது நம் கவனத்திற்கு வந்தது! இது சம்பந்தமாக திருவாரூர் மாவட்ட தலைவர் (திருத்துறைப்பூண்டி) சகோ அப்துர் ரஹ்மான் கூறும் தகவல் இதோ::::
ரஹ்மத் ஸ்கூலுக்கு (முத்துப்பேட்டை) எதிராக இன்று நாம் நடத்திய முற்றுகைப் போராட்டம் குறித்து குழப்பத்தை உண்டு பண்ண நினைக்கும் சில விஷமிகள் "திரித்தும் "மட்டரகமாக விமர்சித்தும் வருவது நம் கவனத்திற்கு வந்தது! இந்த "முற்றுகைப் போராட்டம் ஏன்" என்பது சம்பந்தமாக ஏற்கனவே விளக்கம் கொடுக்கப்பட்டாலும் சில விஷமிகள் திரித்துக் கூறும் சில தகவல்களுக்கு உண்டான விளக்கம் இதோ...!
கேள்வி:::? இந்த போராட்டம் வேண்டுமென்றே "பப்ளிஷிட்டிக்காக" நடத்தப்பட்டதா...?
பதில்!!! பப்ளிஷிட்டிக்காகவும்,வேண்டுமென்றே இந்த ஆர்ப்பாட்டத்தை நாம் நடத்த நாடினால்... சுமார் 55 நாட்கள் கடந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நாம் நடத்தியிருக்க மாட்டோம்! என்றைக்கு இந்தப் பிரச்சனை கிளம்பியதோ அன்றே நடத்தியிருப்போம்! இன்னும் சொல்வதென்றால் பிரச்சனை கிளம்பிய அன்றே நாம் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தாலும் யாரும் எந்தக் கேள்வியும் எழுப்பியிருக்க முடியாது! ஏனெனில் பிரச்சனை வாய்க்கால் வரப்பு,சம்பந்தப்பட்ட பிரச்சனையோ,கொடுக்கல் வாங்கல் பிரச்சனையோ இல்லை ! நம் ஒவ்வொருவரின் ஈமானுடன் பிண்ணிப் பிணைந்த பிரச்சனை! நாம் உயினும் மேலாக மதிக்கும் "இறைத்தூதரை" இழிவுபடுத்திய பிரச்சனையை ஒரு சாதாரண பிரச்சனையாக நாம் எடுத்துக் கொள்ள முடியுமா..? இருப்பினும் நாம் முதலில் பேச்சுவார்த்தையில் இறங்கினோம் !அந்த ஸ்கூலின் முதன்மை ஆசிரியர் சகுந்தலா அவர்களிடம் கேட்கும் போது "தவறு நடந்து விட்டது " என்று சொன்னார்! நாம் விநியோகிக்கப்பட்ட "ஆண்டு விழா மலர் புத்தகங்களை உடனே மீட்டெடுங்கள் என்று பலமுறை அவகாசம் கொடுத்தோம், போனின் மூலமாக,லட்டரின் மூலமாக இப்படி பல்வேறு வழிகளிலும் நாம் கோரிக்கை வைத்தும் அவை நிராகரிக்கப்பட்டது! அவசரம் காட்டவேண்டிய இந்த பிரச்சனையில் பல்வேறு சொதப்பலான காரனங்களைக்கூறி தள்ளிப் போடுவதிலேயே ரஹ்மத் ஸ்கூல் நிர்வாகம் குறியாக இருந்தது . ரஹ்மத் ஸ்கூல் நிர்வாகம் இந்த பிரச்சனையை அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை! என்று சொல்வதை விட ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை! இறைத்துதரை அவமானப் படுத்தியதை அவர்கள் பெரிதாக எண்ணிக் கொள்ளவில்லை! மாறாக தங்களது ஸ்கூல் மானம்(?) (பெயர்)கெட்டுவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்தனர்.(இதுபோல் நபிகளாரை அவமதித்து கார்ட்டூன்கள் வெளியிட்ட மற்றவர்களிடத்தில்(டென்மார்க்,முத்தாரம்,நக்கீரன் ) உடனடியாக செய்தி கேள்வி பட்டவுடன் நாம் ஆர்ப்பாட்டம் நடத்தி நம் கடுமையை உடனே வெளிப்படுத்தினோம் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி உடனடியாக மன்னிப்புக் கேட்க வைத்தோம்)ஆனால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தாமலேயே இந்த விஷயத்தை சுமூகமாக முடித்து விடலாம் என்று எடுத்த முயற்சிகள் அனைத்தையும் ரஹ்மத் நிர்வாகம் துச்சமாக மதித்தது!
கேள்வி::?? ரஹ்மத் நிர்வாகம் மன்னிப்புக் கேட்டும் அதை ஏற்றுக்கொள்ளாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியது ஏன்..?
பதில்..! இந்தக் கேள்விக்கு ஏற்கனவே பதில் கொடுக்கப்பட்டுவிட்டது! அதாவது. தங்களின் இந்த செயலுக்காக ஸ்கூல் நிர்வாகத்திடம் நாம் எதிர்பார்த்தது மன்னிப்பை மட்டும் அல்ல! அவர்கள் இறைத்தூதரின் உருவத்தை ஒரு பேப்பரில் வரைந்து அதை மக்களிடத்தில் காட்டி இதுதான் இறைத்தூதர் (நவூதுபில்லாஹ்)என்று காட்டிவிட்டு,பின்பு தாங்கள் செய்தது தவறு என்று உணர்த்தப்பட்டவுடன் உடனே அதே பொதுமக்கள் முன்னிலையில் அந்த பேப்பரைக் கிழித்து போட்டு விட்டு தவறுக்கு வருந்துகிறோம்! என்று சொன்னால் ஒரு வாதத்திற்கு அந்த மன்னிப்பை ஏற்றுக் கொள்ளலாம்!
ஆனால் அவர்கள் இறைத்தூதரை அவமதித்து வெளியிட்டது பல பிரதிகள் எடுக்கப்பட்டு,உள்நாடுகளிலும்,வெளிநாடுகளிலும்,ஸ்கூல் மானவிகளிடத்திலும் பரவலாக விநியோகித்து விட்டது! மேலும் அவர்கள் மன்னிப்புக் கேட்டது தெரியாமல் செய்துவிட்டோம் என்று உணர்ந்து அந்த மன்னிப்பை வெளிப்படுத்தியதாக தெரியவில்லை! ஏனெனில் நம் ஆர்ப்பாட்டம் நடத்தும் நிமிடங்கள் வரை விநியோகிக்கப்பட்ட புத்தகங்களை வாபஸ் வாங்குவதற்கு எந்த ஒரு சிறு முயற்சியும் அவர்கள் எடுக்கவில்லை! அவர்கள் உண்மையில் தங்களின் தவறை உணர்ந்திருந்தார்கள் என்றால்...ஒரு பேச்சுக்கு வெளிநாடுகளில் விநியோகிக்கப்பட்ட புத்தகங்களை திரும்பப் பெறுவதற்கு கால தாமதம் ஆனால் கூட முத்துப்பேட்டையில் விநியோகிக்கப்பட்ட புத்தகங்கள் வாபஸ் பெறுவதற்கு 55 நாட்கள் தேவைப்பைட்டிருக்குமா..? நாம் அவர்களிடம் முறையிட்ட இரண்டொரு நாளில் திரும்பப் பெற்றிருக்க முடியும்!(இந்த நிமிடங்கள் வரை புத்தகங்கள் வாபஸ் பெறப்பட்ட வில்லையே!) அப்படியென்றால்..அவர்கள் வேண்டுமென்றே தான் இந்த தவறை செய்திருக்கிறார்கள்.. என்பதை நாம் விளங்கிக் கொண்டவுடன் இனியும் இவர்களிடத்தில் “பேச்சுவார்த்தை” எந்தப் பயனும் தராது என்று முடிவு செய்து இவர்களின் சதி வேலையை மக்கள் மன்றத்தில் தெரிவிக்க ஆர்ப்பாட்டத்தில் இறங்கினோம்!
கேள்வி::? சம்பந்தப்பட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் போராட்டத்தில்தான் TNTJ குறியாக இருந்ததா...?
பதில்..! நாம் ஏற்கனவே முன்னமே இதற்குண்டான பதிலை சொல்லிவிட்டோம். போராட்டம் நடத்துவதில்தான் நாம் குறியாக இருந்திருந்தால் இத்தனை நாட்கள் (55) நாம் கடத்தியிருக்க மாட்டோம்!செய்தி கேள்வி பட்ட அன்றோ,அல்லது ஒரு சில நாட்களிலோ நாம் ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்போம்! ஆனால் போராட்டம் நடத்தாமலே இந்த விஷயத்திற்கு தீர்வு காண நாம் எடுத்த முயற்சிகள் அனைத்தையும் ரஹ்மத் ஸ்கூல் நிர்வாகம் ஒரு பொருட்டாக கருதவில்லை! பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஒவ்வொருவரும் கால தாமதத்திற்குத்தான் குறியாக இருந்தார்கள்! நிர்வாகத்திலிருந்து ஒருவர் சொல்வார் இரண்டு நாட்கள் அவகாசத்தில் புத்தகங்களை வாபஸ் வாங்கி விடுவோம் என்பார்,மற்றொருவர் ஐந்து நாட்கள் என்பார்,இன்னுமொருவர் பதினைந்து நாட்கள் என்று அவர்களுக்குள்ளேயே ஒத்தக் கருத்துக்கு வராமலும்,தங்களுக்குள் ஆலோசனை செய்யாமலும் நம்மை ஆஃப் பன்னுவதிலேயே குறியாக இருந்தார்கள்!அவர்கள் பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்சனையை சுமூகமாக முடித்து விடலாம் என்பதில் அவர்களுக்கு சிறிதும் அக்கறை இல்லை என்பதை மேற்கண்ட ஒவ்வொருவரின் வார்த்தைகளும் நமக்கு உணர்த்துகிறது! ஆகவே! இந்த ஆர்ப்பாட்டம் நடத்தும் அளவுக்கு நம்மை தள்ளியது, ரஹ்மத் ஸ்கூல் நிர்வாகம்தான் என்பதை மீண்டும் ஒரு முறை தெளிவு படுத்துகிறோம்!
உண்மை என்னவென்று விளங்கிக்கொள்ளாமல் மனம்போன போக்கில் விஷக்கருத்துக்களை பரப்பி மகிழ்வோர் அல்லாஹ்வையும்,மறுமையும் அஞ்சிக் கொள்ளட்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்!
(குறிப்பு::: நாம் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் எதிரொலியாக ரஹ்மத் ஸ்கூல் நிர்வாகத்தை அரசும் உடனடியாக புத்தகங்களை வாபஸ் பெறுங்கள் என்று நிர்வாகத்திற்கு கட்டளை பிரப்பித்துள்ளது! அதன் பலனாக நிர்வாகம் தங்கள் ஸ்கூல் மாணவிகளிடத்தில் உடனடியாக புத்தகங்களை திரும்பக் கொண்டுவரும்படி கட்டளையிட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் வந்துள்ளது!)
அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே! அல்லாஹு அக்பர்!
By: Abdul Hameed Mahlari,
பொதக்குடி, திருவாரூர் மாவட்டம்.
பொதக்குடி, திருவாரூர் மாவட்டம்.
No comments:
Post a Comment