தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குழுமம் என்ற இந்த இணையம் வெளிநாடு மற்றும் உள்ளூர் தலைமை, மண்டலம், மாவட்ட மற்றும் அனைத்து கிளைகளையும் இணைக்கும் சிரிய முயற்சி |..அக்டோபர் 8 இட ஒதுக்கீடு போராட்டம்.. தாயாராகி விட்டீர்களா?....| ....|
Showing posts with label ஹஜ். Show all posts
Showing posts with label ஹஜ். Show all posts

Saturday, October 29, 2011

ஹஜ் பிறை அறிவிப்பு

தமிழகத்தில் சென்னை,திருவள்ளுர்,ராமநாதபுரம்,நீலகிரி,தஞ்சை,உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பிறை பார்க்கப்பட்டதால் இன்று (28-10-2011) மக்ரிப்லிருந்து தமிழகத்தில் துல் ஹஜ் பிறை 1 ஆரம்பமாகின்றது. இதன் அடிப்படையில் வருகின்ற நவம்பர் 7 ஆம் தேதி தமிழகத்தில் ஹஜ் பெருநாள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

-தலைமையகம்

நன்றி tntj.net

Saturday, October 22, 2011

ஏழைகளின் துயர் துடைத்திட கூட்டுக் குர்பானி, குர்பானி பங்கின் விபரம் மற்றும் அனுப்ப வேண்டிய முகவரி

இப்ராஹீம் நபியவர்களின் தியாகத்தை நினைவு கூர்வதற்காகவும், அவர்களைப் போல் எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயார்
என்று உறுதி எடுப்பதற்காகவும் வசதி வாய்ப்புள்ளவர்கள் மீது குர்பானி கொடுப்பது கடமையாக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.

ஏழைகளின் துயர் துடைப்பது குர்பானியின் அடுத்த நோக்கமாக அமைந்துள்ளது. இதனால் தான் வறுமை நிலவிய ஆரம்ப காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஆணையிட்டிருந்தார்கள். பின்னர் செழிப்பான நிலை ஏற்பட்டபின் இக்கட்டளையைத் திரும்பப் பெற்றார்கள்.

ஏழைகளின் துயர் துடைப்பதும் குர்பானியின் நோக்கம் என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

ஒரு பக்கம் ஏராளமாக குர்பானி கொடுக்கப்பட்டு வாங்குவோரின்றி மாமிசம் சீரழிவதையும், இன்னொரு பக்கம் போதிய மாமிசம் கிடைக்காமல் ஏழைகள் திண்டாடுவதையும் நாம் காண்கிறோம்.
இந்த ஏற்றத் தாழ்வை அகற்றி ஏழைகளுக்கு தாராளமாக இறைச்சி கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் தாங்கள் வழங்கும் ஆடு மாடுகளை டிஎன்டிஜே தலைமைக்கு வழங்கினால், தேவையான பகுதிகளில் முறையாக வினியோகம் செய்து அதன் கணக்கு விபரத்தை உணர்வில் வெளியிடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆடு மாடுகள் தரத்திற்கேற்ப விலைகள் நிர்ணயிக்கப்படுவதாலும், ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு விலைகளில் விற்கப்படுவதாலும், கடைசி நேரத்தில் விலை ஏற்றப்படுவதாலும் உத்தேசமாகத் தான் இதற்கான தொகையை நிர்ணயிக்க இயலும்.

மாடுகளைப் பொறுத்தவரை இந்த ஆண்டு ஒரு மாடு 7500 முதல் 9000 வரை உள்ளது. அறுத்து வெட்டி கூறுபோட்டு பங்கிடுவதற்கான கூலியும் உள்ளது. எனவே நடுத்தரமான விலையில் 8500 அளவில் மாடு வாங்கி அதற்கான கூலியும் சேர்த்து 9100 வரை ஆகலாம். எனவே முழுமையாக ஒரு மாடு கொடுக்க விரும்புவோர் 9100 அனுப்பி வைக்குமாறும் ஒரு மாட்டில் ஏழு பேர் கூட்டு சேர்ந்து கொடுக்க விரும்பினால் ஒரு பங்குக்கு 1300 ரூபாய்கள் அனுப்புமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

நடுத்தரமான ஆட்டின் விலை மற்றும் அதற்கான கூலி சேர்த்து 6500 வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏழைகள் வாழும் பகுதி மக்களுக்காக ஒரு ஆடு வழங்க விரும்புவோர் 6500 அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த விலை யாவும் உத்தேசமானது தான்.

நீங்கள் அனுப்பும் தொகைக்கு ஆடு மாடுகள் வாங்கி ஏழைகள் வசிக்கும் பகுதிகளில் வினியோகம் செய்யப்படும். இயன்ற வரை நீங்கள் வழங்கும் தொகைக்கே (கூலியைக் கழித்து) பிராணிகள் வாங்கப்படும். அந்த விலையில் ஆடுமாடுகள் கிடைக்காத பட்சத்தில் அதைவிட சற்றே குறைந்த விலையில் ஆடு மாடுகள் வாங்கப்படும். உங்களால் அனுப்பப்ட்ட 9100 விலையில் மாடு கிடைக்காமல் 8500க்கு கிடைத்தால் இந்த வகையில் மிச்சமாகும் தொகை முஸ்லிம் அல்லாத நண்பர்கள் கேட்கும்போது இலவச குர்ஆன் மற்றும் மார்க்க புத்தகங்கள் வகைக்கு மட்டும் பயன்படுத்தப்படும்.

இதற்கு உடன்படும் அன்பர்கள் குர்பானிக்கான தொகைகளை அனுப்பி வைக்கும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.

குர்பானிக்கான டிடி மற்றும் செக் அனுப்புவோர்
UNARVU. A/c No : CA 01000200000698, UCO BANK, CHENNAI என்ற பெயரில் எடுத்து பின் வரும்
முகவரிக்கு மட்டும் அனுப்பவும்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மாநிலத் தலைமையகம்,
எண் 30 அரண்மனைக்காரன் தெரு, மண்ணடி, சென்னை – 600001
போன் 044 – 25215226

மாடு ஒரு பங்கின் விலை – ரூ1300 மட்டும்
ஆடு ஒன்றுக்கு = ரூ6500 மட்டும்


நன்றி www.tntj.net

Wednesday, October 19, 2011

உங்கள் கிளையில் நூலகம் அமைக்க வேண்டுமா?




அன்புள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை நிர்வாகிகளே, உறுபினர்களே,

உங்கள் கிளையில் நூலகம் அமைக்க வேண்டுமா.. அல்லது உங்கள் நூலகத்திற்கு மேற்கொண்டு குறுந்தகடு / புத்தகம் வேண்டுமா...?


கீழ்க்கண்ட முகவரிக்கு முழு விவரத்துடன் கடிதம் அனுப்பவும்...

அனுப்பவேண்டிய மின்அஞ்சல் E-mail : jtmansoor@gmail.com

ஹஜ் செய்பவர்களுக்கு மற்றும் ஒரு செய்தி

அன்பார்ந்த சகோதர்களே,

நம்முடைய ஜமாஅத்தை சார்ந்த சகோதரர் மன்சூர் அலி அவர்கள் புனித ஹரம் பள்ளி விரிவாக்க பணியில் வேலை செய்வதால், இந்த வருடம் உங்களுக்கு தெரிந்த ஹஜ் செய்ய வந்திருக்கும் யாருக்கேனும் உதவி ஏதேனும் தேவை பட்டால் என்னுடைய மொபைல் நம்பரில் தொடர்பு கொள்ளலாம்.
மன்சூர் அலி அவர்களின் தொலைபேசி எண் - 00966536078815 .

நம்முடைய சகோதரர் ஒரு இடத்தில் வேலை செய்வதால் இன்ஷா அல்லாஹ் அவரால் முடிந்த அளவிற்கே உதவி செய்ய முடியும் என்பதையும் நினைவில் கொள்ளவும்...

Tuesday, September 27, 2011

ஹஜ் சர்வீஸ்களும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடும்

கடந்த சில ஆண்டுகளாக தனியார் நடத்தும் ஹஜ் மற்றும் உம்ரா சர்வீஸ்கள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. தவ்ஹீத் ஜமாஅத்தின் முக்கிய நிர்வாகிகளே ஹஜ் சர்வீஸ் நடத்தி அது குறித்து பல புகார்களை தவ்ஹீத் ஜமாத் சந்திக்க நேர்ந்ததை அனைவரும் அறிவீர்கள்.

கடந்த காலத்தில் தவ்ஹீத் ஜமாஅத் கிளைகள் சார்பிலோ, அல்லது தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் சார்பிலோ இது போன்ற சர்வீஸ்கள் நடத்தும் போது, அந்தக் குறைபாடுகளுக்கு தவ்ஹீத் ஜமாஅத் பதில் சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதையும் அறிவீர்கள்.

மக்கள் மத்தியில் நாம் கட்டிக்காத்து வரும் நற்பெயரைக் காப்பாற்றும் வகையில் இது குறித்து கடந்த 22/09/2011 அன்று மாநில நிர்வாகக் குழு மற்றும் மேலாண்மைக் குழுவின் கூட்டுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை அனைத்து சகோதரர்களுக்கும் அறியத் தருகிறோம்.

1) மாநில நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், கிளை நிர்வாகம் சார்பிலோ, மற்றும் ஜமாஅத்தில் உள்ள பல்வேறு அணிகள் சார்பிலோ உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ ஹஜ் சர்வீஸ்கள் நடத்தக் கூடாது.
நம் சார்பில் அரசிடம் அனுமதி பெற்றும் நடத்தக் கூடாது. அனுமதி பெற்றவர்களுடன் டை அப் முறையிலும் ஹஜ் சர்வீஸ் நடத்தக் கூடாது.

2) வளைகுடா நாடுகளின் கிளைகள் தவிர மற்ற எந்தக் கிளைகளும் உம்ரா சர்வீஸ்களும் நடத்தக் கூடாது.
வளைகுடா நாடுகளில் உம்ரா சர்வீஸூக்கு விதிவிலக்கு அளிப்பதற்கான காரணங்கள் பின்வருமாறு:

* வளைகுடாவில் இருந்து உம்ராவுக்கு அழைத்துச் செல்லும் போது அதில் ஹஜ்ஜைப் போல அதிகமான நாட்களோ, அதிகப்படியான சர்வீஸ்களோ இல்லை. மினா, அரஃபா, முஸ்தலிபாவிற்கு அழைத்துச் செல்லுதல், அதிக நாட்கள் தங்க ஏற்பாடு செய்தல் போன்றவை இல்லை. உம்ராவுக்கு புறப்பட்ட தினத்திலேயே திரும்பி வந்து விட முடியும். அதிகபட்சம் ஐந்து மணி நேரத்திற்கு மேல் மக்காவில் இருக்கும் அவசியம் ஏற்படாது. அது குறித்து விமர்சனங்கள் வரவும் இல்லை. வருவதற்கு வாய்ப்பும் இல்லை. இதன் காரணமாக வளைகுடா கிளைகள் ஹஜ் சர்வீஸ் நடத்தக் கூடாது என்றும், உம்ரா சர்வீஸ் நடத்தலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மற்ற நாடுகளில் இருந்து உம்ரா சர்வீஸ் நடத்துவதற்கும் வளைகுடாவில் இருந்து உம்ரா சர்வீஸ் நடத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. உதாரணமாக இந்தியாவில் இருந்து உம்ராவிற்கு அழைத்துச் செல்லும் போது அதிக நாட்கள் தங்க வைத்தல், பராமரித்தல் போன்ற பலவித சர்வீஸ்கள் உள்ளன. இதில் குறைபாடுகள் ஏற்பட்டு ஜமாஅத்தின் பெயர் கெட்டுப்போக வாய்ப்புகள் உள்ளன. வளைகுடாவில் இருந்து உம்ராவுக்கு அழைத்துச் செல்லும் போது இந்த நிலை இல்லை என்பதால் இவ்வாறு வேறுபடுத்தி முடிவு எடுக்கப்பட்டது.

ஒரு வேளை உம்ரா சம்மந்தமாகவும் ஆதாரத்துடன் விமர்சனம் வரும் பட்சத்தில் அது குறித்தும் பரிசீலனை செய்து முடிவெடுக்கப்படும் எனவும் நிர்வாகக் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் இதன்மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

3) மாநில, மாவட்ட, கிளை, மற்றும் மண்டல நிர்வாகிகளும் தனிப்பட்ட முறையில் ஹஜ் சர்வீஸ்கள் நடத்தக் கூடாது. ஜமாத்தே நேரடியாக நடத்தும் போது ஏற்படும் குறைபாடுகளும் விமர்சனங்களும் நமது நிர்வாகிகள் நடத்தும் போதும் ஏற்பட்டு விடும். கடந்த காலங்களில் இது போல ஏற்பட்டுள்ளது.
எனவே உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ உள்ள நிர்வாகிகள் யாரும் ஹஜ் சர்வீஸ்கள் நடத்தக் கூடாது.

அவ்வாறு நடத்துவோர் எந்த மட்டத்திலும் நிர்வாகத்திற்கு தேர்வு செய்யப்படக் கூடாது.

(இது பாக்கர் தொடர்பான விமர்சனங்கள் வந்த போதே முந்தைய நிர்வாகம் எடுத்த முடிவாகும்.)

ஆனால் வளைகுடாவில் உள்ள நிர்வாகிகள் தனிப்பட்ட முறையில் உம்ரா சர்வீஸ்கள் நடத்தலாம். வளைகுடா கிளைகளுக்குச் சொன்ன காரணமே இதற்கும் பொருந்தும் என்பது தான் இதற்குக் காரணம்.

குறிப்பு: நம் ஜமாஅத்திற்கு எந்த நேரத்தில் களங்கம் ஏற்படாமல் இருப்பதற்காக மாநில நிர்வாகம் கடந்த காலங்களில் இது போன்ற பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளதையும் உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்..

உதாரணமாக,
• மாநில நிர்வாகிகள் மற்றும் மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் தாங்கள் நடத்துகின்ற அல்லது நடத்த திட்டமிட்டுள்ள தொழிலுக்கு பகிரங்கமாக மக்களிடம் பங்கு சேர்க்கக்கூடாது. பொதுமக்கள் என்ற அடிப்படையில் தங்களது தனிப்பட்ட சொந்தம் மற்றும் தனிப்பட்ட நட்பு அடிப்படையில் தவிர.
• மாநில மற்றும் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பகிரங்கமாக ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடக்கூடாது.
• மாநில, மேலாண்மைக் குழு, மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் குலுக்கல் சீட்டு நடத்தக் கூடாது.
என்ற முடிவுகளைப் போல, ஜமாஅத்தின் நலன் கருதி மேற்கண்ட முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.
மாநிலத் தலைமை நிர்வாகக்குழு, மேலாண்மைக்குழு கூடி எடுக்கப்பட்ட இம்முடிவுக்கு ஏற்ப தங்கள் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது.

இப்படிக்கு..,

ஆர்.ரஹ்மத்துல்லாஹ்
பொதுச்செயலாளர்