அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மண்டல, மாவட்ட, கிளைகளின் இணையங்களை ஒரே இடத்தில் பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த இணையத்தில் தங்கள் கிளையின் இணையத்தை பதிய tntjgroups@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு அனுப்பிவைக்கவும்.
Thursday, August 22, 2013
Monday, June 11, 2012
வரதட்சணை மரண வழக்கில் ஆயுள் தண்டனைக்கு குறைவான தண்டனை இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி!
வரதட்சணை மரணத்துக்குக் காரணமான குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனைக்கு குறைவான தண்டனை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
உத்தர்காண்ட் மாநிலம் ரூர்கீயை சேர்ந்த ரேணு என்பவரை வரதட்சணை கொடுமைக்காக 1996-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி மாமனார் குடும்பத்தினர் உயிரோடு எரித்துக் கொன்றனர். இந்த வழக்கில் மாமனார் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கும் விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இதனை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 3 பேரும் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு நீதிபதிகள் சுவதந்தர் குமார், ரஞ்சன் ககோய் விசாரித்தனர். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் கூறிய தீர்ப்பு:
ரேணு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மகேஷ் குமார் அவரைக் காப்பாற்ற முயற்சித்திருந்தால் அவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவரது உடலில் ஒரு தீக்காயம் கூட இல்லை. இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 304 பி-யின் கீழான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும்போது, அந்த குற்றம் வரதட்சணைக்காக கொடூரமாக செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஆயுள் தண்டனைக்கு குறைவான தண்டனையை குற்றவாளிகளுக்கு வழங்க முடியாது. எனவே இந்த வழக்கில் 3 பேருக்கும் கீழ் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது என்றனர்..
Thursday, April 26, 2012
சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு : முஸ்லிம்களின் கவனத்திற்கு ……!
இந்தியாவில் உள்ள பல்வேறு சாதி மக்களின் சமூக, பொருளாதார, சாதி, கல்வி விபரங்களை தொகுப்பதற்காக சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கணக்கெடுப்பு ஏப்ரல் 23-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது. 1931-ம் ஆண்டுக்குப் பிறகு இது மாதிரியான சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியாவில் நடத்தப்படவில்லை.
சுதந்திர இந்தியாவில் இதுதான் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு. இந்த கணக்கெடுப்பின் முடிவில் சாதிவாரி மக்கள் தொகை விபரம் துள்ளியமாக தெரியும்.
இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் தான் எதிர்காலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகார இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
விகிதாச்சார இட ஒதுக்கீடு என்பது இன்று பேச்சளவில் மட்டுமே இருக்கிறது.
இந்த கணக்கெடுப்பு முடிந்தபிறகு விகிதாச்சார இட ஒதுக்கீடுக்கான குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கும். தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் பட்டியலில்
1) தக்னி முஸ்லிம்
2) தூதுகோலா
3) லெப்பை, ராவுத்தர், மரைக்காயர்
4) மாப்பிள்ளா
என 4 சாதியினராக பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் போது இந்த 4 சாதிகளில் ஒன்றை குறிப்பிட்டு, அது பள்ளி மாற்றுச் சான்றிதழில் இடம் பெற்றால் தான் அந்த குழந்தைக்கு வட்டாட்சியர் பிற்படுத்தப்பட்டோருக்கான சாதிச் சான்றிதழை வழங்குவார்.
இந்த சாதிச் சான்றிதழை வைத்து தான் மத்திய, மாநில அரசுகளின் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடும், கல்வி உதவித் தொகைகளும் பெற முடியும்.
பல முஸ்லிம்கள் இந்த விபரம் தெரியாமல் பட்டாணி, சாஹிப், பரிமளம் போன்ற உட்பிரிவுகளையும், குடும்பப் பெயர்களையும் சாதி என்ற இடத்தில் குறித்து விடுகின்றனர்.
பெற்றோர்கள் தெரியாமல் செய்யும் இந்தத் தவறின் காரணமாக மாணவச் செல்வங்களின் எதிர்காலம் பாழ்பட்டு போய்விடுகிறது.
எனவே மதம் என்று குறிப்பிடப்படும் இடங்களில் “இஸ்லாம்” என்றும் சாதி என்று குறிப்பிடப்படும் இடங்களில் மேற்கண்ட 4 பிரிவுகளில் ஏதாவது ஒரு பிரிவை மட்டுமே முஸ்லிம்கள் குறிப்பிட வேண்டும்.
வேறு எந்த பெயரையும் குறிப்பிடக்கூடாது. சாதிவாரி கணக்கெடுப்பின் போதும் இதே வழிமுறையைத் தான் முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இந்த சாதி வாரி கணக்கெடுப்போடு சேர்த்து பொருளாதார கணக்கெடுப்பும் எடுக்கப்படுகிறது.
சில முஸ்லிம் குடும்பங்களின் மாத வருமானம் 2 ஆயிரம் ரூபாய்தான் இருக்கும். ஆனால் கவுரவத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என கருதி மாத வருமானம் 10 ஆயிரம் ரூபாய் என்று பொய்யாக சொல்கிறார்கள். இது மாதிரியான பொய்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை பாழாக்கி விடும் என்பதை மறந்துவிடக்கூடாது.
இந்த ஆண்டு வரை மருத்துவம், பொறியியல் படிக்கும் ஏழை மாணவர்கள் அரசின் கல்வி உதவித் தொகையை பெற வேண்டுமெனில் குடும்பத் தலைவரின் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இந்த அளவுக்கு உண்மையிலேயே வருமானம் உள்ள ஒரு முஸ்லிம் குடும்பத் தலைவர் கவுரவத்திற்காக மாத வருமானம் 10 ஆயிரம் ரூபாய் என்று கொடுத்தால் ஆண்டு வருமானம் 1.20 லட்சம் ரூபாயாகி, இவர் ஏழை அல்ல என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டு, இவருடைய பிள்ளைகளுக்கு அரசின் கல்வி உதவித் தொகை கிடைக்காமல் போய்விடும்.
சமீபத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள அடிப்படை கல்வி உரிமைச் சட்டத்தின் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளும் கூட 25 சதவீது இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.
ஒரு முஸ்லிம் குடும்பம் வருமானத்தை அதிகப்படுத்தி காண்பித்தால் இந்த இடஒதுக்கீடும் கிடைக்காமல் போய்விடும். இப்படி முஸ்லிம்கள் சாதாரணமாக சொல்லும் சிறிய பொய் கூட எதிர்கால சந்ததியினரை பாதிக்கும் என்பதை புரிந்து கொண்டு பொருளாதார நிலவரங்களை கேட்கும் போது பிள்ளைகளுக்கு கிடைக்கும் அரசின் கல்வி உதவித் தொகை பாதிக்காதவாறு பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாத்தில் சாதிப் பாகுபாடுகள் கிடையாது. அதனால் சாதி இல்லை என்று தான் நாங்கள் விபரம் தருவோம் என்று சிலர் அடம் பிடிக்கிறார்கள். இஸ்லாத்தில் சாதிகள் கிடையாது என்பது நூற்றுக்கு நூறு உண்மை.
இந்த உண்மை முஸ்லிமல்லாதவர்களுக்கு நன்கு தெரியும். அதனால்தான் இஸ்லாத்தை நோக்கி மக்கள் அணி அணியாக வருகிறார்கள்.
சில விஷயங்கள் நம்மை மீறி நடந்துவிடும். அதில் ஒன்றுதான் சாதி ரீதியான இட ஒதுக்கீடு. இந்தியாவில் இட ஒதுக்கீடு என்பது சாதிரிதீயில் தரப்படுகிறதே தவிர மத ரீதியில் தரப்படவில்லை. அப்படி இருக்கும் போது சாதி இல்லை என்று முஸ்லிம்கள் குறிப்பிட்டால் அவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பயன் கிடைக்காமல் போய், அவர் தம் சந்ததியினர் கல்வி, வேலைவாய்ப்பில் அறவே ஒதுக்கப்பட்டு விடுவார்கள்.
அரசியல் சட்டம் வகுக்கப்படும் போது தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு சாதி ரீதியில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
அதுபோல் பின் தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கவும் வழி வகை செய்யப்பட்டது. அதோடு சேர்த்து இஸ்லாத்தில் சாதிகள் இல்லை. அதனால் முஸ்லிம்களுக்கு சாதி ரீதியான இடஒதுக்கீடு கொடுப்பது சரிப்படாது. எனவே அவர்களுக்கு மத ரீதியில் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் விதி செய்யப்பட்டிருந்தால் இஸ்லாத்தில் இல்லாத சாதிகளை குறிப்பிடும் அவசியம் இன்று முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்காது. அதில் நம் முன்னோர்கள் கோட்டைவிட்டு விட்டனர்.
இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழ் தான் இருக்கவேண்டும் என்று அரசியல் நிர்ணய சபையில் உரத்து முழக்கமிட்ட காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் கூட முஸ்லிம்களுக்கு சாதி ரீதியான இட ஒதுக்கீடு சரிப்படாது. மதரீதியான இட ஒதுக்கீடுதான் சாத்தியப்படும் என்று கொள்கை முழக்கம் செய்யத் தவறிவிட்டார்.
அதனால் இந்துக்களை சாதிரீதியாக பிரித்தது போல் முஸ்லிம்களையும் சாதிரீதியாக பிரித்து இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
இதைமாற்ற வேண்டுமெனில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். அப்படி திருத்தம் கொண்டு வந்த பிறகுதான் முஸ்லிம்கள் “சாதி இல்லை” என்று சொல்ல வேண்டும்.
அதற்கான கோரிக்கைகளையும், போராட்டங்களையும் முஸ்லிம்கள் முன்னெடுத்துச் சென்று வெல்ல வேண்டும். அந்த கோரிக்கையில் வென்று, அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு முன்பே “சாதி இல்லை” என்று ஒரு முஸ்லிம் குறிப்பிட்டால் மத்திய, மாநில அரசுகளின் கல்வி, வேலைவாய்ப்பில் உள்ள இட ஒதுக்கீடுகளையும், சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகை, வங்கி வட்டி குறைப்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் பறி கொடுக்க நேரிடும். இதை கவனத்தில் கொண்டு சமூக, பொருளாதார சாதி கணக்கெடுப்பின் போது முஸ்லிம்கள் சரிவர நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Monday, April 16, 2012
விவாதம் உறுதி செய்யப்பட்டது! திருக்குர்-ஆன் இறைவேதமே!
விவாதம் உறுதி செய்யப்பட்டது! திருக்குர்-ஆன் இறைவேதமே! என்ற தலைப்பில் ஏப்ரல் 28, 29 சனி மற்றும் ஞாயிறு ஆகிய தேதிகளில் விவாதம் நடத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
விவாதத்திலிருந்து தப்பி நழுவி ஓடுவதற்காக அவர்கள் விவாதத்தை நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்ற பொருந்தாக்காரணத்தை கூறி வந்தனர்.
அவர்களை தப்பி ஓடவிட்டுவிடக்கூடாது என்பதற்காக நாம் இறங்கி வந்து, நேரடி ஒளிபரப்பு இல்லாமலேயே விவாதம் செய்ய நிர்பந்தித்து அவர்கள் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டுள்ளனர்.
எனவே, நேரடி ஒளிபரப்பும், விளம்பரமும் இல்லாமல் தரப்புக்கு 25 பார்வையாளர்களைக் கொண்டு இவ்விவாதம் நடைபெற உள்ளது.
விவாதம் முடிந்த பிறகு தாமதமின்றி முழு விவாத வீடியோக்கள் வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ்....
Wednesday, April 11, 2012
சத்திய கொள்கைக்கு வெற்றி: S.P.பட்டிணம் பள்ளிவாசல் தீர்ப்பு, அல்ஹம்துலில்லாஹ்!

இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணம் கிராமத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கு சொந்தமான பள்ளிவாசல் சுன்னத் ஜமாஅத்தினர் உரிமை கொண்டாடியதால் வட்டாட்சியர் உத்தரவின் படி பூட்டி சீல் வைக்கப்பட்ட்து.
இதற்கு எதிராக பல்வேறு சட்டப்போராட்டங்களையும் அறவழிப் போராட்டங்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்ந்து நட்த்தி வந்த்து.
இப்பள்ளிக்கு உரிமை கொண்டாடி சுன்னத் ஜமாஅத்தினர் திருவாடாணை உரிமையியல் நீதி மன்றத்தில் வழக்குப் போட்டனர். இவர்கள் தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் சென்ற வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
உத்தரவின் நகலை காண click here
இதன் பின்னர் வட்டாட்சியர் அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்து தனது தடை உத்தரவை ரத்துச் செய்து தவ்ஹீத் ஜமாஅத்தினர் பள்ளிவாசலைத் திறந்து கொள்ளலாம் என்று தீர்ப்பு அளித்தார்.
இத்தீர்ப்பை மாவட்ட ஆட்சியாளர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டு இன்று (10-4-2012) செவ்வாய் கிழமை காலை 8 மணிக்கு காவல் துறையினரின் போதிய பாதுகாப்புடன் பள்ளிவாசல் திறக்கப்படது.
மேலும் சுன்னத் ஜமாஅத்தினர் யாரும் பள்ளிவாசலை தவ்ஹீத் ஜமாஅத் திறக்கும் போது எந்த இடையூறும் செய்யக் கூடாது என்று பள்ளிவாசலில் இது குறித்து பொது அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது கடைப்பிடித்துக் காட்டிய முன்மாதிரியை அடிப்படையாகக் கொண்டு ஆர்ப்பாட்டமோ அமர்க்களமோ இல்லாமல் திறப்பு விழா என்ற பெயரில் அதிக மக்களைக் கூட்டி மற்றவர்களைப் புண்படுத்தக் கூடாது என்பதால் அமைதியான முறையில் பள்ளிவாசல் இன்று திரக்கப்பட்டது.
நன்றி - tntj.net
Saturday, March 17, 2012
19 கூட்டத்தினர்........
Saturday, January 28, 2012
ஓட்டம் பிடித்த ஜெர்ரி தாமஸ்
Saturday, January 21, 2012
நேரடி விவாதம் - TNTJ vs கிரிஸ்தவர்கள்
கிரிஸ்தவ பாதிரிகளுடனான நேரடி விவாதம்... 21-01-2012 மற்றும் 22-01-2012 ஆகிய தேதிகளில் நடைபெறும். இன்ஸா அல்லாஹ்...
இன்றை விவாதம் பார்க்க
ஆன்லைபி.ஜே Click Here
முகநூல் வழியாக Click Here
இன்றை விவாதம் பார்க்க
ஆன்லைபி.ஜே Click Here
முகநூல் வழியாக Click Here
Saturday, January 14, 2012
தானே புயல் நிவாரண களத்தில் TNTJ (வீடியோ)
நேரடி ஒளிபரப்பு இன்று - Live Program -ஆன்லைன் பி.ஜே
14-1-2012 சனி கிழமை இரவு 7.30 முதல் 10 மணி வரை நடைபெறும் ரஹ்மதுல்லாஹ் அவர்களின் ஃபிரான்ஸ் ஆன்லைன் நிகழ்ச்சி ஆன்லைன்பிஜே இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்!
முகநூலில் பார்க்க Click
முகநூலில் பார்க்க Click
Monday, January 9, 2012
‘தானே புயல்’ நிவாரண உதவி 10 லட்சம், நேரடி களத்தில் TNTJ, நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்களுடன்!
முதல் கட்டமாக அறிவித்த TNTJ
கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தையும், பாண்டிச்சேரியையும் கடுமையாகத் தாக்கிய தானே புயல் காரணமாக இந்த இரண்டு மாவட்டங்களும் கடுமையான சேதத்திற்கு உள்ளாயின. கடும் சீற்றத்துடன் வீசிய காற்று அங்கிருந்த மக்களின் வீட்டுக்கூரைகளைப் பிய்த்து எறிந்தது. காற்றின் வேகம் காரணமாக கடலூர் மற்றும் பாண்டி ஆகிய பகுதிகளில் இருந்த அதிகமான மரங்கள் வேறோடு சாய்ந்தன. இவ்வாறு சாய்ந்த மரங்கள் பெரும்பாலாணவை வீடுகள் மீது விழுந்ததால் பெரும்பாலான வீடுகள் இடிந்து விழுந்தன.
தானே புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் சாதாரணமானது அல்ல! அது 50 வருடத்திய மக்களின் வாழ்வாதாரங்களை சிதைத்துச் சென்றுவிட்டது. கடலூர் மாவட்டத்தைப் பொருத்தவரை விவசாயமும், கடல்சார் தொழில்களும் தான் அந்தப் பகுதி மக்களின் பிழைப்பாதாரம். பண்ருட்டி, மேல்பட்டாம்பாக்கம் போன்ற பகுதிகளில் இருக்கும் வாழைத்தோப்புகள், முந்திரித்தோப்புகள், தென்னந்தோப்புகள் ஆகியவை முழுமையாகச் சேதமடைந்தன.
பலா மற்றும் வாழை மரங்கள் ஆகியவை வேறோடு சாய்ந்ததால் கடலூர் மாவட்ட மக்கள் தங்களின் பிழைப்பை இழந்து நிற்கின்றார்கள். விவசாயிகளாக இருந்த மக்களின் விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த கடலை, கரும்பு போன்றவை புயலின் சீற்றத்தால் உருக்குலைந்து போனது. கடல் பகுதிகளும் வாழும் மக்களின் படகுகளும்,வலை உபகரணங்களும், வீடுகளும் சேதமடைந்தன.
தானே புயல் ஏற்படுத்திய பாதிப்பினால் குடிநீர் கிடைக்காமல் கடலூர் மற்றும் புதுச்சேரி மக்கள் மிகவும் பாதிப்படைந்தனர். குடிநீர் மட்டுமின்றி உணவுக்கும் வழியில்லாமல் கடலூர், பாண்டி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளானார்கள்.
புயலின் வேகத்தால் சாய்ந்து போன மரங்களைப் போல மின்கம்பங்களும், டிரான்ஸ்பார்மர்களும் முறிந்து விழுந்தன. மின் கம்பங்கள் சாய்ந்து, கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்சாரம் வழங்கமுடியாத நிலையில் மாவட்ட நிர்வாகம் இருக்கின்றது. புயல் தாக்கிய அன்று முதல் இன்றைய தினம் வரைக்கும் கடலூர் மற்றும் பாண்டிச்சேரியின் பலபகுதிகள் மின்சாரம் கிடைக்காமல் அந்தப் பகுதிகள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன.
நிலைமை சீரடைந்து மீண்டும் பழைய நிலைக்கு கடலூர் மற்றும் புதுச்சேரி மாவட்டங்கள் திரும்புவதற்கு இன்னமும் ஆறு மாத காலங்கள் ஆகும் என நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
நிவாரணப் பணிகளில் கடுமையான மெத்தனப்போக்கு காட்டப்படுவதாகப் பலரும் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். ஒவ்வொரு அரசியல் கட்சித்தலைவர்களும் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளை ஆராய்ந்து அதன்பின்னர் நிவாரண உதவிகளை அறிவித்தனர். இன்னும் சிலர் அவர்களின் கட்சிக்காரர்கள் பரிந்துரை செய்த சொற்ப சிலருக்கு நிதி உதவிகள் வழங்கிவிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கியதாக பத்திரிகைகளுக்குச் செய்தி கொடுத்து விட்டு சென்று விட்டனர்.
ஆனால் இந்தப் புயலால் உண்மையிலே பாதிக்கப்பட்ட மக்கள் யாருக்கும் உரிய நிவாரணம் சென்றடையவில்லை என்பது தான் கண்கூடு. அரசியல் கட்சிகள், நாங்களும் வந்து சென்றோம் என்று காட்டிக் கொள்வதற்காகவே மட்டுமே இதுபோன்ற பார்வையிடுதல் வேலைகளை செய்து கொண்டிருந்த போது இதிலிருந்து வேறுபட்டு மக்களின் துயர்துடைக்க நேரடியாகக் களமிறங்கி அந்த மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
கடலூர்,பாண்டி ஆகிய மாவட்டங்களில் புயலால் சேதாரங்கள் ஏற்பட்ட மறுநாள் அந்தப் பகுதிகளில் இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையைச் சேர்ந்த சகோதரர்கள் உடனடியாகக் களமிறங்கி அந்த மக்களிளை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்து அவர்களின் அத்யாவசியத் தேவையான தண்ணீர்,பால், உணவு ஆகியவற்றை உடனடியாக அவர்களுக்கு ஏற்பாடு செய்து தந்தனர்.
இன்னும் சில கிளைகளில், பாதிப்புக்குள்ளாகிய மக்களுக்கு அரிசி, பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கினார்கள். ஆனால் தானே புயலால் வீடுகளை இழந்தவர்களும், கூரைகள் இடிந்தவர்களும் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
புயல் தாக்கியது முதல் மாநிலத் தலைமையில் இருந்து மாவட்ட மற்றும் கிளைகளின் பணிகள் கேட்டறியப்பட்ட வண்ணம் இருந்தன. பொதுமக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டியது அவசியம் என்ற தகவலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட நிர்வாகிகள், மாநிலத் தலைமைக்கு கொண்டு வந்தனர்.
உணவு,உடை,உறைவிடம் என அத்யாவசியத் தேவைகள் எதுவுமில்லாமல் நிற்கும் இந்த மக்களின் துயரத்தைத் துடைக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்பதைக் கருத்தில் கொண்டு, மேற்படி மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மக்களின் விவரங்களைத் திரட்டுமாறு அந்தந்தக் கிளைகளுக்கு தகவல் தரப்பட்டது. கிளை மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பாதிப்புகளை நேரடியாகப் பார்வையிட்டு உண்மையாகவே பாதிப்புக்குள்ளாகியிருந்தவர்களின் பட்டியலைச் சேகரித்தார்கள்.
அதனைத் தொடர்ந்து கடந்த 04/01/2011 புதன்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லா தலைமையில் மாநிலச் செயலாளர்கள் எழும்பூர் சாதிக், அம்பத்தூர் யூசுப், மவலவி ஜமால், சமூக ஆர்வலர் தஸ்தகீர் துறைமுகம் கிளைத் தலைவர் ஷரீப் ஆகியோர் அடங்கிய நிவாரணக்குழு பாதிக்கப்பட்ட பகுதிகளில் களமிறங்கியது. தானே புயலால் கடும் சேதத்தைச் சந்தித்த கடலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதிகளையும் பார்வையிட்டனர்
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கிளைக்கும் தகவல் கொடுத்து அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த பட்டியலைத் தயாரித்து ஒவ்வொருவருக்கும் டோக்கன் கொடுக்குமாறும் டோக்கனுடனும் ரேஷன் கார்டுடனும் குறிப்பிட்ட இட்த்தில் திரட்டி வைக்குமாறும் முன்னரே தலைமை மூலம் பாதிக்கப்பட்ட ஊர்களுக்கு தெரிவிக்கப்பட்டன. ஒவொரு ஊருக்கும் நிர்வாகிகள் வரும் நேரமும் தெரிவிக்கப்பட்ட்து.
திட்டமிட்ட படி சென்ற இந்த நிவாரணக் குழுவினர், முதலில் பண்ருட்டிக்குச் சென்றனர்.
பண்ருட்டி பகுதியில் தானே புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து எவ்வித ஆதரவும் இன்றி நின்ற மக்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களுக்கு தலா ரூ 2,000 த்தை முதல் கட்டமாக நிவாரண உதவியாக வழங்கினார்கள்.
பண்ருட்டியில் வழங்கப்பட்ட நிவாரணத்தைத் தொடர்ந்து மாநில நிர்வாகிகள் களம் கண்ட இடம் மேல்பட்டாம்பாக்கம். இந்தப் பகுதியும் புயலின் சீற்றத்தால் பாதிப்படைந்த பகுதிதான். இங்கிருந்த மக்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து நின்றவர்கள். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 2000 ரூபாய்கள் ரொக்கமாக வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து பரங்கிப்பேட்டை பகுதியில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. தானே புயல் காரணமாக இந்தப் பகுதியில் இருந்த குடிசை வீடுகள் அடியோடு சேதமடைந்தன. குடிசைகள் அப்படியே வீழ்ந்ததாலும், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததாலும் அங்கிருந்த அனைத்துப் பொருட்கள் வீணாயின.
தானே நிவாரண நிதி மற்ற பகுதிகளை விட பரங்கிப்பேட்டையில் தான் அதிகமான குடும்பத்துக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 2000 ரூபாய்கள் வழங்கப்பட்டன.
பரங்கிப்பேட்டையைத் தொடர்ந்து கடலூர் OT பகுதிக்கு சென்ற நிர்வாகிகள் அங்கிருந்த கிளை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் தலா 2000 ரூபாய் வீதம் நிவாரண உதவிகளை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் சென்ற நிவாரணக்குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 2000 வீதம் வழங்கினார்கள்.
இதன் பின்னர் பாண்டிச்சேரியை நோக்கித் துவங்கியது அவர்களின் பயணம். பாண்டிச்சேரி சுல்தான் பேட்டை கிளையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் தலா 2000 வீதம் வழங்கினார்கள்.
இந்த உதவி வழங்கும் நிகழ்வில் எவ்வித தள்ளுமுள்ளும் இன்றி அனைத்து சகோதர சகோதரிகளும் தனித்தனியாக வரிசையில் நின்றபடி அமைதியாக வாங்கிச் சென்றனர்.
பொதுவாக ஒரு மத அமைப்பு அவர்கள் சார்ந்த மத மக்களுக்கு மட்டுமே இதுபோன்ற உதவிகளை மேற்கொள்ளும். ஆனால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கிய நிவாரண உதவியில் இஸ்லாமிய மக்கள் மட்டுமின்றி மாற்று மதத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகளும் அதிகமானோர் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த அரசியல் கட்சியுமே அந்த மக்களுக்கு எந்த நிவாரணத்தையும் முழுமையாக வழங்கிடாத நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த உதவி அந்த மக்களுக்கு கொஞ்சம் ஆறுதல் தறுவதாக அமைந்திருப்பதாக அந்தப் பகுதி மக்கள் குறிப்பிட்டார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முதற்கட்டமாக அறிவித்த இந்த பத்து லட்சம் ரூபாய் நிதி அவர்களுக்கு தற்காலிகமாக வழங்கப்பட்ட ஒரு முதலுதவி நிதியாகுமே தவிர இது அவர்களின் துயரத்தைப் போக்கிவிடாது. இவர்களுக்கு உதவ வேண்டிய பொறுப்பு நம் அனைவரின் மீதுமே இருக்கின்றது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இன்னமும் அதிகமான நிவாரணத்தை வழங்குவதற்கு வாக்களித்துள்ளது. இது இறைவனின் கிருபையால் நீங்கள் கரம் கொடுக்காமல் சாத்தியமாகாது.
Wednesday, January 4, 2012
இறைவனின் திருப்பெயரால்...
பிப்ரவரி 14ல் முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்!
அன்புள்ள சகோதர, சகோதரிகளே! உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களுக்கு நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். அவ்வாறு அழைக்கப்பட்ட போராட்டங்களில் பங்கு கொண்டும் இருக்கிறீர்கள்.
அதுபோன்ற போராட்டங்களில் ஒன்றாக பிப்ரவரி 14 போராட்டத்தை நீங்கள் கருதிவிட வேண்டாம். தலைவர்களுக்குப் புகழ் சேர்ப்பதற்காகவோ, அரசியல்வாதிகளிடம் உங்களைக் காட்டி தலைவர்கள் ஆதாயம் அடைவதற்காகவோ, கேளிக்கை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிப்பதற்காகவோ, தலைவர்களின் தர்ம தரிசனத்துக்காகவோ உங்களை அழைக்கவில்லை.
இது முழுக்க முழுக்க உங்களுக்காகவும், உங்கள் நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவும், நீங்கள் படும் அவஸ்தைகளை உங்கள் வழித் தோன்றல்கள் பெறக்கூடாது என்பதற்காகவும் நடத்தப்படும் வாழ்வுரிமைப் போராட்டமாகும்.
இந்த நாட்டில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் உங்கள் கண்ணெதிரில் உயரத்துக்குச் சென்று கொண்டிருப்பது நீங்கள் அறிந்ததுதான். எல்லா சமுதாயத்தவரும் உயர் கல்வி பெற்று நல்ல வேலை வாய்ப்புக்களையும், அரசியல் அதிகாரத்தையும் பெற்றுள்ளதை நாம் அறிவோம்.ஆனால் உங்களின் நிலை என்னவென்பது உங்களுக்குத் தெரியுமா? நாட்டின் விடுதலைக்காக கல்வியையும், வேலைவாய்ப்புக்களையும் தியாகம் செய்த நம்மைத் தவிர மற்ற அனைவரும் நம்மை எல்லா வகையிலும் பின்னுக்குத் தள்ளிவிட்டு பல மடங்கு மேலே சென்று விட்டார்களே, அது பற்றிச் சிந்தித்தீர்களா? கூலித் தொழிலாளியாகவோ, இறைச்சிக் கடைக்காரராகவோ, நடைபாதையில் வியாபாரம் செய்பவராகவோ, கொல்லுப்பட்டறையில் கடின வேலை செய்வோராகவோ, தோல் பதனிடும் தொழிலாளியாகவோ, பெட்டிக்கடைகள் நடத்துபவராகவோ, குறைந்த ஊதியத்தில் கடைகளில் வேலை செய்பவராகவோ இருப்பவர்கள் நம் சமுதாயத்தில் மட்டும் அதிகமாக இருப்பது ஏன் என்று சிந்தித்துப் பார்த்தீர்களா? சொந்த நாட்டில் தகுந்த கல்வியும் தகுதிக்கேற்ற வேலையும் மறுக்கப்பட்டு நாம் மட்டும் வெளிநாடுகள் சென்று மனைவி மக்களைப் பிரிந்து அல்லல் படுவது ஏன்? ஒட்டகம் மேய்த்தல், சாலை போடுதல், கழிவுகளைச் சுத்தம் செய்தல், உயிரைப் பணயம் வைத்து உயரமான கட்டிடப் பணிகளில் கூலித் தொழில் செய்தல், தனியாருக்குக் காரோட்டும் வேலை, வீடுகளைச் சுத்தம் செய்தல்,சமையல் வேலை இப்படி அற்பமான ஊதியத்தில் வேலை பார்த்து நீங்கள் மட்டும் ஏன் அவல நிலையில் இருக்க வேண்டும்?
மற்றவர்கள் எல்லாம் மனைவி மக்களோடு மகிழ்ச்சியாக இருக்க, நீங்கள் மட்டும் தொலைபேசி மூலம் குடும்பம் நடத்துவது ஏன்? இதை மாற்றி அமைக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறதா அல்லது இல்லையா? இந்த அவல நிலைகளை சச்சார் மற்றும் மிஸ்ரா ஆகிய நீதிபதிகள் தங்களது விரிவான அறிக்கைகள் மூலம் மத்திய அரசிடம் விளக்கியிருக்கின்றனர்.
இந்த நிலையை மாற்றிட முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீட்டை மத்திய அரசு உடனடியாக வழங்கிட வேண்டும். முன்னர் பெற்று வந்த உரிமைகளைப் பறிக்கும் வகையில் சிறுபான்மையினருக்கு 4.5 சதவிகித ஒதுக்கீடு என்பதை வாபஸ் பெற்று, முஸ்லிம்களுக்கு 10 சதவிகிதம், இதர சிறுபான்மையினருக்கு 5 சதவிகிதம் என்று ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரையின்படி வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவிகிதம் போதுமானதல்ல என்று திமுக மற்றும் அதிமுக ஆகியன ஒப்புக் கொண்டுள்ளதால், ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்களித்ததை நினைவூட்டும் வகையில் தமிழக ஒதுக்கீட்டை ஏழு சதவிகிதமாக உயர்த்தக் கோரியும் எதிர்வரும் பிப்ரவரி 14 அன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு முஸ்லிம் சமுதாயத்தினரை டி.என்.டி.ஜே அழைக்கிறது.
தலைவர்கள் துதிபாட, அரசியல் கட்சிகளுக்கு பலம் சேர்க்க, உன்னைக் காட்டி விலை பேசுவோருக்கு உன்னை அறியாமல் உதவ பல களங்களைச் சந்தித்துள்ளாய். இப்போது உனக்காக மானத்தோடும், மரியாதையோடும் நீ வாழ்வதற்காக, உனக்கு ஏற்பட்ட நிலை உன் சந்ததிகளுக்கும் ஏற்படாமால் தடுத்து நிறுத்திட நாங்கள் பட்ட துன்பங்களை எங்கள் சந்ததிகளுக்கும் விட்டுச் செல்லமாட்டோம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஏமார்ந்தது போதும், இனியும் ஏமாற மாட்டோம் என்பதை அரசியல்வாதிகளுக்கு உணர்த்திட குடும்பத்துடன் புறப்பட்டு வா! அலை அலையாய் திரண்டு வா! புயலெனப் புறப்பட்டு வா! இறைவன் உதவியால் வென்று காட்டுவோம்.
அன்புடன் அழைக்கிறது!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மாநிலத் தலைமையகம்,
30, அரண்மனைக்காரன் தெரு, சென்னை 600001. போன்: 044 25215226.
Thursday, December 29, 2011
Friday, December 23, 2011
சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதுடில்லி: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக, 27 சதவீத இட ஒதுக்கீட்டில், சிறுபான்மையினருக்கு, 4.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க, மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
இது அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஆங்கில நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான, 27 சதவீத இட ஒதுக்கீட்டில், 4.5 சதவீதத்தை சிறுபான்மையினருக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டது. கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், இந்த ஒதுக்கீடு சலுகையை அவர்கள் பெறலாம். முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் மற்றும் பார்சிகள் இந்த சலுகையைப் பெறுவர். இந்த இட ஒதுக்கீடு, ஒரு நிர்வாக உத்தரவு மூலம் அமலுக்கு வரும். மதம் மற்றும் மொழி சிறுபான்மையினருக்கான தேசிய கமிஷன் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த இட ஒதுக்கீடு முடிவை, மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது. மத்திய அமைச்சரவையில், ஏக மனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம் பெற்றுள்ள, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஜாதியினர், இந்த இட ஒதுக்கீட்டால் பலன் பெறுவர். உத்தர பிரதேச மாநில தேர்தலை கருத்தில் கொண்டே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
- தினமலர் 22-12-2011 செய்தி
இது அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஆங்கில நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)




