வரதட்சணை மரணத்துக்குக் காரணமான குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனைக்கு குறைவான தண்டனை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
உத்தர்காண்ட் மாநிலம் ரூர்கீயை சேர்ந்த ரேணு என்பவரை வரதட்சணை கொடுமைக்காக 1996-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி மாமனார் குடும்பத்தினர் உயிரோடு எரித்துக் கொன்றனர். இந்த வழக்கில் மாமனார் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கும் விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இதனை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 3 பேரும் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு நீதிபதிகள் சுவதந்தர் குமார், ரஞ்சன் ககோய் விசாரித்தனர். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் கூறிய தீர்ப்பு:
ரேணு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மகேஷ் குமார் அவரைக் காப்பாற்ற முயற்சித்திருந்தால் அவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவரது உடலில் ஒரு தீக்காயம் கூட இல்லை. இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 304 பி-யின் கீழான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும்போது, அந்த குற்றம் வரதட்சணைக்காக கொடூரமாக செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஆயுள் தண்டனைக்கு குறைவான தண்டனையை குற்றவாளிகளுக்கு வழங்க முடியாது. எனவே இந்த வழக்கில் 3 பேருக்கும் கீழ் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது என்றனர்..
No comments:
Post a Comment