தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குழுமம் என்ற இந்த இணையம் வெளிநாடு மற்றும் உள்ளூர் தலைமை, மண்டலம், மாவட்ட மற்றும் அனைத்து கிளைகளையும் இணைக்கும் சிரிய முயற்சி |..அக்டோபர் 8 இட ஒதுக்கீடு போராட்டம்.. தாயாராகி விட்டீர்களா?....| ....|

Thursday, November 17, 2011

மழைப் பொழிவு குறித்து குழப்பமான தகவல்களைத் தரும் வானிலை மையம்

தமிழகத்தில் மழைப் பொழிவு மற்றும் காற்றழுதத் தாழ்வு நிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடும் தகவல்கள் பெரும்பாலும் குழப்பமாகவே உள்ளது. அது கூறுவது பெரும்பாலும் நடப்பதில்லை என்று மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் வெயில் அதிகமாகும் போதும், மழைக்காலத்தின்போதும் எந்த டிவியைத் திருப்பினாலும் ரமணன் முகம்தான் தெரியும். அந்த அளவுக்கு பருவ மழைக்காலங்களிலும், கொளுத்தும் வெயில் காலத்திலும் ரமணனைத்தான் மக்கள் பெரிதும் நம்பியிருக்கிறார்கள்.

அவர் கூறப் போவது என்ன, அவர் சொல்வதைப் பொறுத்து லீவு போடலாம் என்ற எண்ணம் பெரும்பாலானவர்களிடம் உள்ளது. ஆனால் உண்மையில் நடப்பது என்ன? பெரும்பாலும் ரமணன் (இங்கு ரமணன் என்பது சென்னை வானிலை ஆய்வு மையம் என்றும் கொள்ளலாம்) சொல்வது நடப்பதில்லை என்பது மக்களின் குறையாக உள்ளது.

வரும் 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும். ஓரிரு இடங்களில் மிக கன மழை இருக்கலாம் என்பதுதான் ரமணனின் டிரேட் மார்க் பேச்சு. இந்த வார்த்தைத் தொடர்களில் பெரும்பாலும் மாற்றம் இருக்காது. ஆனால் அவர் மழை பெய்யும் என்று சொன்னால் மழை பெய்வதில்லை, இன்று மேகமூட்டமாக இருக்கும் என்றால் அன்றுதான் மழை கொட்டித் தீர்த்து வெள்ளக்காடாகும் என்று மக்கள் புலம்புகிறார்கள்.

நிஜமும் அதுவாகவே இருக்கிறது. சென்னை வானிலை மையம் பெரும்பாலும் தெரிவிக்கும் வானிலை முன்னறிவுப்புகள் மகா குழப்பமாகவே இருக்கிறது. இன்று மழை பெய்யும் என்று ரமணன் சொல்லிக் கொண்டிருப்பார். ஆனால் அன்று பார்த்து வெயில் வறுத்தெடுக்கும். அதேபோல இன்று மழை பெய்ய வாய்ப்பில்லை என்று அவர் சொன்னால் கண்டிப்பாக கையில் குடையுடன்தான் கிளம்ப வேண்டும்.இல்லாவிட்டால் அடை மழையில் மாட்டிக் கொள்ள நேரிடும்.

பொத்தாம் பொதுவாக வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், ஓரிரு உள்புற மாவட்டங்களிலும் மழை பெய்யும் வாய்ப்பு உண்டு. சில இடங்களில் மிக கன மழையை எதிர்பார்க்கலாம் என்று கூறினால் போதாது, துல்லியமாக அதைக் கணித்துக் கூற வேண்டும். அப்போதுதான் மக்களுக்குக் குழப்பம் ஏற்படாது என்று மக்கள் கூறுகிறார்கள்.

இன்று மழை பெய்யும் என்றால் பெய்ய வேண்டும். இல்லாவிட்டால் சொல்லக் கூடாது. அப்படிச் சொல்வதாக இருந்தால் துல்லியமாக கணித்துக் கூற வேண்டும்.இதுதான் மக்களின் அடிப்படை எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்கேற்பத நமது வானிலை மையத்தை தரம் உயர்த்தி, துல்லியமான கணிப்புகளை வெளியிடும் வகையில் மாற்ற வேண்டும் என்று மக்கள் கருதுகிறார்கள்.

மாறாக, வடிவேலு படத்தில் வருவது போல நடு விரலைப் பிடித்தால் மழை பெய்யும், ஆள்காட்டி விரலைப் பிடித்தால் பெய்யாது என்ற ரேஞ்சுக்கு பேசிக் கொண்டிருந்தால் மக்கள் கேலி செய்து சிரிக்கவே செய்வார்கள் என்பதை வானிலை ஆய்வு மையம் உணர வேண்டும்.

எத்தனையோ செயற்கைக் கோள்களை வானில் வலம் வரச் செய்தும், இந்த மழை குறித்த முன்னிறிவிப்புகள் இன்னும் கற்காலத்திலேயே இருக்கிறது இந்த உலகம்.

நன்றி -தட்ஸ் தமிழ்.

ஆனால் என்ன தான் அறிவியல் வளர்ச்சி அதிகமாகியிருந்தாலும் இந்த மழை பொழிவு எப்போது வரும் என்பதை கணிப்பில் கூறினாலும் அது தவறாக மாறதான் செய்கிறது.

அவனே வானிலிருந்து தண்ணீரை இறக்கினான். அதன் மூலம் ஒவ்வொரு பொருளின் விளைச்சலையும் வெளிப் படுத்துகிறோம். அதிலிருந்து பசுமையான பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அடுக்கி வைக்கப்பட்ட தானியத்தை அப்பயிர்களில் வெளிப்படுத்துகிறோம். பேரீச்சை மரத்தின் பாளைகளில் தொங்கும் பழக்குலைகளையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவமரம், மாதுளை ஆகியவற்றையும் (வெளிப்படுத்துகிறோம்.) அவ்விரண்டும் (தோற்றத்தில்) ஒன்றுபட்ட தாகவும், (தன்மையில்) வேறுபட்டதாகவும் உள்ளன. அது பலன் கொடுக்கும் போது அதன் பலனையும், அது கனிவதையும் கவனியுங்கள்! நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 6-99)

மேற்க்கண்ட வசனத்தில் அல்லாஹ் தான் நாடிய இடத்தில் மழையை பொழியவைக்கிறான் என்ற உன்மையை அறியலாம். அதை கணித்து கூறுகிறோம் என்று கிளம்பும் வானிலை மையங்கள் கூறுவது எப்போதும் உன்மையாகாது என்பதை உணர்ந்தால் நன்று..

அவனே உங்கள் இறைவனாகிய அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற் குரியவன் வேறு யாருமில்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தவன். எனவே அவனையே வணங்குங்கள்! அவன் அனைத்துப் பொருட்களுக்கும் பொறுப்பாளன். 6-102

No comments:

Post a Comment