தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குழுமம் என்ற இந்த இணையம் வெளிநாடு மற்றும் உள்ளூர் தலைமை, மண்டலம், மாவட்ட மற்றும் அனைத்து கிளைகளையும் இணைக்கும் சிரிய முயற்சி |..அக்டோபர் 8 இட ஒதுக்கீடு போராட்டம்.. தாயாராகி விட்டீர்களா?....| ....|

Thursday, October 27, 2011

இந்திய குடிஉரிமை அடையாள அட்டை - National Citizenship Card

ஒருவரின் இருப்பிட நிரூபணத்திற்கு முக்கிய ஆவணங்களாக உள்ள ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்டவை, மாநில அளவில் மட்டும் செல்லத்தக்கவை.தற்போதைய பணி சூழலில், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு அவ்வப்போது மாறுதலில் செல்ல வேண்டியுள்ளது. அப்போது அவர்களிடம், இருப்பிட நிரூபணத்திற்கான ஆவணங்கள் இல்லாததால், ரேஷன் அட்டை, சமையல் காஸ் இணைப்பு, வங்கி கணக்கு துவங்குவது போன்றவற்றில், நடைமுறை சிக்கல் ஏற்படுகிறது. இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க..

இந்தியாவில் பயங்கரவாதம், தீவிரவாதம் போன்ற செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், அதை சரிசெய்யவும் வெளிநாடுகளில் காணப்படும் குடியுரிமை அடையாள அட்டையை வழங்க கடந்த ஆண்டு மத்திய அரசு தீர்மாணித்தது. அதன் அடிப்படையில். இந்திய சிறப்பு அடையாள ஆணையத்தில் (The Unique Identification Authority of India - UIDAI) கட்டுப்பாட்டில்..


இந்திய குடிமக்களுக்காக இலவசமாக வழங்கப்படும் 12 டிஜிட் எண் கொண்ட ( ஆதார் என்று (Aadhar - அடித்தளம்) பெயரிடப்பட்டுள்ள) அடையாள அட்டையை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். இந்த கார்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம்.



இன்று முதல் (27.10.2011) அண்ணாசாலை தலமை தபால் நிலையத்தில் மட்டும் உங்கள் அப்ளிகேஷனைபுர்த்தி செய்து, உங்கள் பத்து விரல் கை ரேகை பதிந்து, புகைப்படம் எடுத்த பிறகு உங்களுக்கு தற்காலிக ஐடி கொடுப்பார்கள். 30 - 60 நாட்களுக்குள் வீட்டுக்கு உங்களுக்கு ஒரிஜினல் கார்டு கிடைக்கும். உங்களுடைய கார்டு ஸ்டெட்டஸை ஆன்லைன் மூலம் உங்களிடம் ஒருக்கும் தற்காலிக ஐடி மூலம் தெரிந்து கொள்ளலாம். இதற்க்கு கட்டணம் ஒன்றும் கிடையாது. இந்த கார்டு மூலம் உங்கள் வங்கி கணக்கும் இனைக்கபடும். இது தான் நமது நாட்டின் பாஸ்போர்ட்டுக்கு அடுத்த பெரிய ஐடி. இதை வைத்து நேபாலுக்கு கூட பாஸ்போர்ட் இல்லாமல் செல்லலாம்.

நவம்பர் 1-ம் தேதி முதல் மயிலாப்பூர், தியாகராய நகர் மற்றும் பூங்கா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தலைமைத் தபால் நிலையங்கள் மூலம் அடையாள அட்டை பதிவுப் பணி தொடங்க உள்ளது. நவம்பர் 21-ம் தேதி முதல் 31 மாவட்டங்களில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில் அடையாள அட்டை பதிவுப் பணி தொடங்கவுள்ளது.

இதுகுறித்து, மேலும் விவரங்களை அறிய, 044-28582798, 0431-241245,0452-2526398,0422-2558204 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தமிழக வட்ட தலைமை தபால் துறை தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கார்டு விண்ணப்பப் படிவம் பெற. - Click

தேவையான ஆவணங்களை அறிய - click

No comments:

Post a Comment