தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குழுமம் என்ற இந்த இணையம் வெளிநாடு மற்றும் உள்ளூர் தலைமை, மண்டலம், மாவட்ட மற்றும் அனைத்து கிளைகளையும் இணைக்கும் சிரிய முயற்சி |..அக்டோபர் 8 இட ஒதுக்கீடு போராட்டம்.. தாயாராகி விட்டீர்களா?....| ....|

Sunday, October 30, 2011

லிபியாவில் இனி ஷரீயா (இஸ்லாமிய) ஆட்சி

அல்ஹம்து லில்லாஹ்...! அல்ஹம்து லில்லாஹ்...! அல்ஹம்து லில்லாஹ்...!!



லிபியாவில்...மனிதச் சட்டம் அப்புறப் படுத்தப்பட்டு, இறைச்ச சட்டங்கள் மலர்கிறது...!



லிபியாவில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் உடல் அமைந்துள்ள இடம் பொதுமக்கள் பார்வையிட முடியா வண்ணம் பூட்டப்பட்டுள்ளது. கடாபியின் மரணத்துக்கு பின் அங்கு என்ன வகையான ஆட்சி முறை நிலவும் என்ற சர்ச்சை இருந்து வந்தது.

இச்சூழலில் இது குறித்து கருத்து தெரிவித்த லிபிய இடைக்கால குழுவின் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீல் "லிபியாவில் இஸ்லாமிய ஷரீயா சட்டங்களே இனி ஆளும்" என்றும் "அதற்கு மாற்றமான சட்டங்கள் அகற்றப்படும்" என்றும் தெரிவித்தார்.

மேலும் லிபியா ஒரு இஸ்லாமிய நாடாக இருப்பதால், "ஷரீயாவை முதன்மை சட்டமாக வைத்திருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?" என்று வினா எழுப்பிய ஜலீல் "கடாபியின் ஆட்சி முறையில் பலதார மணம் தடை செய்யப்பட்டு இருந்தது. அது ஷரீயாவுக்கு மாற்றமாக இருப்பதால் பலதாரமணத்தை தடை செய்யும் சட்டம் இன்றிலிருந்து அகற்றப்படுகிறது" என்றார்.

2 comments:

  1. salam... There is a correction in ur post.... In libya there is no sharia govt. there is only SHIA government they had declared it..

    ReplyDelete
  2. சியா சட்டம் என்பதற்கான தங்களுடைய ஆதாரத்தை தரவும். அதை பார்த்து பின் மாற்றம் செய்கிறோம்.

    ReplyDelete