தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குழுமம் என்ற இந்த இணையம் வெளிநாடு மற்றும் உள்ளூர் தலைமை, மண்டலம், மாவட்ட மற்றும் அனைத்து கிளைகளையும் இணைக்கும் சிரிய முயற்சி |..அக்டோபர் 8 இட ஒதுக்கீடு போராட்டம்.. தாயாராகி விட்டீர்களா?....| ....|

Saturday, September 10, 2011

முத்துப்பேட்டையில் வினாயகர்சதுர்த்தி ( ?)


தமிழகத்தில் 1985ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்துத்துவ வெறிக்கும்பல் நடத்தும் வினாயகர் சதுர்த்தி என்றாலே கலவரமும் வன்முறையும்தான் நினைவுக்கு வந்து திண்டாட்டத்தை ஏற்படுத்துகிறது.

சுதந்திர போராட்டத்தின் போது, பாலகங்காதர திலகர், விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தி ஹிந்து-முஸ்லிம்களை ஒன்றிணைத்து, அவர்களிடையே நாட்டுப் பற்றை கொண்டுவர முயன்ற போது. அதில் முஸ்லிம் மக்களும் கலந்து கொண்டார்கள் என்று கூறப்படுவதுண்டு. ஆனால், இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு – தங்களின் இருப்பையும் இந்திய முஸ்லிம்களின் மீது வெறுப்பையும் காட்டுவதையே பிழைப்பாகக் கொண்ட மதவெறியர்களின் கையில் அப்பாவி வினாயகரும் ‘துருப்பு சீட்டாக’ சிக்கிக் கொண்டார்.


வினாயகர் சிலைகளைக் கரைக்க ஊர்வலமாகச் செல்பவர்கள் எவரும் மந்திரங்கள் சொல்லுவதில்லை. அதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று தூக்கி செல்கிறவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மந்திரமே தெரியாது; அதற்குக் காரணம் உயர்சாதிக்கு மட்டும் சொல்வதற்குச் சொந்தமான மந்திரத்தைப் பிறர் காதால் கேட்க கூடாது; நாவால் உச்சரிக்க கூடாது, மீறினால் ‘ஈயம் காய்ச்சி ஊற்றப்படும்’ என்ற ‘மனுதர்மத்தின்’ அன்பான மிரட்டல்தான்.

ஹிந்து தர்மப்படி ‘சூத்திரன்’ ‘மிலேச்சன்’ என்ற முத்திரைகளோடு கோவிலுக்குள் நுழைய அருகதையற்றவர்களின் கைகளிள் முஸ்லிம்களை எதிர்ப்பதற்காக ‘சிலையை’த் திணிக்கிறது ஹிந்துத்வா. வேதங்களால், தீண்டத்தகாதவர்களாக வரையறை செய்யப்படவர்களுக்குத் தற்காலிகமாக ‘ஹிந்து’ என்று முத்திரை குத்தி, முஸ்லிம்களுக்கெதிராகக் களமிறக்குகிறது ஹிந்துத்வா. சாதி வேறுபாடு பாராட்டும் இந்துத்வாவின் இரட்டை வேடம் மக்கள் அறியாதது அன்று. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தபோது பின்னங்கால் பிடரியில் இடிபட, மூச்சு முட்ட ‘ஹை கோர்ட்’ ‘சுப்ரீம் கோர்ட்’ என்று அலைந்து -திரிந்து தடை வாங்கியது – ஹிந்துத்வ கும்பல்தான்.சட்டமும் காவல் துறையும் என்ன செய்துகொண்டிருக்கின்றன? இழவுத் துறையாகிப் போன உளவுத்துறை போல் செயலிழந்து விட்டதா? அமைதியாக நடக்க வெண்டிய ஊர்வலத்தை – பதட்டம் நிறைந்ததாக மாற்றும் கயவர்கள் யார் என்று காவல் துறைக்குத் தெரியாதா? டிசம்பர் ஆறை முன்னிட்டு முன்னெச்சரிகை நடவடிக்கை என்ற பெயரில் முஸ்லிம்களைக் கைது செய்வதில் காட்டும் அக்கறையில் சிறிது கூட ‘ஹிந்துத்வ’ வினாயகர் ஊர்வல ஏற்பாட்டாளர்கள் மீது காட்டாதது ஏன்?

முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் வரும் 10ம்தேதி நடக்கிறது. இதையொட்டி 2 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்களின் பாதுகாப்பு போடப்படுகிறது என்று மத்திய மண்டல ஐஜி மாஹாலி நேற்று கூறியுள்ளார்.

வருடா வருடம் பல ஆயிரம் காவல்துறையினரை முத்துப்பேட்டை வினாயர் ஊர்வலத்திற்காக இறக்கியும்.. சென்ற ஆண்டில் கூட  ஊர்வலத்தில் கலந்துக்கொண்டவர்கள் மிக அதிக அளவில் கொந்தளித்ததுடன் "பத்துகாசு முருக்கு பள்ளிவசால் நொறுக்கு", "இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா" "முத்துப்பேட்டை கருப்பு கோட்டை' " துளுக்கனே வெளியேறு" என்று மத துவேசத்தோட கோசமிட்டதிலும், ஊர்வலத்தின் போது வேலூர் தொகுதி எம்.பி அப்துல் ரஹ்மான் வீட்டில் கல் வீசி தாக்குதல் நடத்தியும் அவர்கள் அளித்த வாக்குறுதியை மீறும் விதமாகவும் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலை மீறியும், முத்துப்பேட்டையின் அமைதியை சீர்குலைக்கும் விதமாகவும் நடந்துக்கொண்ட இந்துமுன்னணி அமைப்பினர். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முத்துப்பேட்டையில் ஏற்படும் கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும் முத்துப்பேட்டையில் நிரந்தர அமைதி ஏற்படுத்தி தருமாறும் காவல்துறையிடம் வலிறுத்தி புகார் மனு TNTJ முத்துப்பேட்டை நகர நிர்வாகிகள் அளித்திருந்தது.

முன்பை விட கடந்த ஆண்டு வேறு எந்த நிகழ்வும் இல்லை என்றாலும்.. இந்த ஆண்டு 10-09-2011 இன்று வினாயகர் ஊர்வலத்தின் போது இன்னும் அமைதியாக காவல்துறை நடத்தி பொதுமக்களுக்கும், முஸ்லிம்களிடம் இருக்கும் பதட்டத்தையையும் நீக்குமா? காவல்துறை.   பொறுத்திருந்து பார்ப்போம்... 

No comments:

Post a Comment