தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குழுமம் என்ற இந்த இணையம் வெளிநாடு மற்றும் உள்ளூர் தலைமை, மண்டலம், மாவட்ட மற்றும் அனைத்து கிளைகளையும் இணைக்கும் சிரிய முயற்சி |..அக்டோபர் 8 இட ஒதுக்கீடு போராட்டம்.. தாயாராகி விட்டீர்களா?....| ....|

Monday, April 16, 2012

விவாதம் உறுதி செய்யப்பட்டது! திருக்குர்-ஆன் இறைவேதமே!

விவாதம் உறுதி செய்யப்பட்டது! திருக்குர்-ஆன் இறைவேதமே! என்ற தலைப்பில் ஏப்ரல் 28, 29 சனி மற்றும் ஞாயிறு ஆகிய தேதிகளில் விவாதம் நடத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. 

விவாதத்திலிருந்து தப்பி நழுவி ஓடுவதற்காக அவர்கள் விவாதத்தை நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்ற பொருந்தாக்காரணத்தை கூறி வந்தனர்.

அவர்களை தப்பி ஓடவிட்டுவிடக்கூடாது என்பதற்காக நாம் இறங்கி வந்து, நேரடி ஒளிபரப்பு இல்லாமலேயே விவாதம் செய்ய நிர்பந்தித்து அவர்கள் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டுள்ளனர். 

எனவே, நேரடி ஒளிபரப்பும், விளம்பரமும் இல்லாமல் தரப்புக்கு 25 பார்வையாளர்களைக் கொண்டு இவ்விவாதம் நடைபெற உள்ளது. விவாதம் முடிந்த பிறகு தாமதமின்றி முழு விவாத வீடியோக்கள் வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ்....

Wednesday, April 11, 2012

சத்திய கொள்கைக்கு வெற்றி: S.P.பட்டிணம் பள்ளிவாசல் தீர்ப்பு, அல்ஹம்துலில்லாஹ்!


இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணம் கிராமத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கு சொந்தமான பள்ளிவாசல் சுன்னத் ஜமாஅத்தினர் உரிமை கொண்டாடியதால் வட்டாட்சியர் உத்தரவின் படி பூட்டி சீல் வைக்கப்பட்ட்து.

இதற்கு எதிராக பல்வேறு சட்டப்போராட்டங்களையும் அறவழிப் போராட்டங்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்ந்து நட்த்தி வந்த்து.
இப்பள்ளிக்கு உரிமை கொண்டாடி சுன்னத் ஜமாஅத்தினர் திருவாடாணை உரிமையியல் நீதி மன்றத்தில் வழக்குப் போட்டனர். இவர்கள் தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் சென்ற வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்!
உத்தரவின் நகலை காண click here
இதன் பின்னர் வட்டாட்சியர் அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்து தனது தடை உத்தரவை ரத்துச் செய்து தவ்ஹீத் ஜமாஅத்தினர் பள்ளிவாசலைத் திறந்து கொள்ளலாம் என்று தீர்ப்பு அளித்தார்.
இத்தீர்ப்பை மாவட்ட ஆட்சியாளர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டு இன்று (10-4-2012)  செவ்வாய் கிழமை காலை 8 மணிக்கு காவல் துறையினரின் போதிய பாதுகாப்புடன் பள்ளிவாசல் திறக்கப்படது.
மேலும் சுன்னத் ஜமாஅத்தினர் யாரும் பள்ளிவாசலை தவ்ஹீத் ஜமாஅத் திறக்கும் போது எந்த இடையூறும் செய்யக் கூடாது என்று பள்ளிவாசலில் இது குறித்து பொது அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது கடைப்பிடித்துக் காட்டிய முன்மாதிரியை அடிப்படையாகக் கொண்டு ஆர்ப்பாட்டமோ அமர்க்களமோ இல்லாமல் திறப்பு விழா என்ற பெயரில் அதிக மக்களைக் கூட்டி மற்றவர்களைப் புண்படுத்தக் கூடாது என்பதால் அமைதியான முறையில் பள்ளிவாசல் இன்று திரக்கப்பட்டது.
நன்றி - tntj.net

Saturday, March 17, 2012

19 கூட்டத்தினர்........

இவர்களின் போழி ஒற்றுமையை பார்த்தீர்களா?